சென்னை / மதுரை: அனல் பறக்கும் திமுக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் “பொசுங்கி” மறைந்தார். திமுகவின் தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம். திமுகவின் பிரசார பீரங்கியாக வலம்வந்த ஆறுமுகம், பெரியாரால் பாரட்டப்பெற்று, பேரறிஞர் அண்ணாவிடம் “தீப்பொறி” என்ற பட்டம் வாங்கியவர். தீப்பொறி ஆறுமுகம் 1970களில் தொடங்கி 2001 வரை திமுகவின் முன்னணிப் பேச்சாளராக மேடைகளில் முழங்கியவர். அனல் பறக்கும் பேச்சால், கேட்கும் அனைவரையும் “சுட்டுப்போட்ட” தீப்பொறி ஆறுமுகத்தின் பேச்சில் பரபரப்பை எற்படுத்தக்கூடிய செய்திகள் மிகுந்திருக்கும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை அதிகம் விமர்சித்து பேசினார். 2001இல் திமுக தலைமை மீது ஏற்பட்ட மனக்கசப்பால் அரசியல் குல வழக்கப்படி கட்சித்தாவல் செய்து அதிமுகவில் இணைந்து அக்கட்சியின் தலைமைக்கழகப் பேச்சாளராக இருந்தார். பின்னர், 2010ஆம் ஆண்டு ஜெயலலிதா போட்ட சூடு தாங்காமல் அதிமுகவில் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்று குற்றம்சாட்டி மு.க.அழகிரி முன்னிலையில் மீண்டும் திமுகவில் இணைந்து, திமுகவின் தலைமைக்கழகப் பேச்சாளராக தொடர்ந்தார்.

அன்னாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு கண்ணீர் வடித்த அழகிரி பின்னர் நமது கப்சா நிருபரிடம் அளித்த பேட்டி: திமுகவின் முன்னோடிகளுள் ஒருவரான தீப்பொறி ஆறுமுகம் தனது இறுதி அனல் மூச்சு அடங்கும்வரை திமுக மீது மிகுந்த பற்றுதலோடு இருந்தவர். பொறி பறக்கும் பேச்சால் திமுகவினரை கவர்ந்த தீப்பொறி இன்று பொசுங்கி விட்டது விட்டது. அப்போது தான் எனது செல்லிடப் பேசியில் ஆதித்யா டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் “இங்கிலீஷ்காரன்” என்ற திரைக்கவியத்தில் வடிவேலு தீப்பொறி திருமுகமாக தோன்றிய காட்சியை பார்த்தேன்.தீப்பொறின்ன எப்படி? அப்படியே கொழுந்த விட்டு எறியுவியா? என்று ஒருவர் கேட்க, “எரிமலையா செதறுவேண்டா, அக்கினியா கக்குவேன்.. மொத்தமா சொன்னா தீப்பிழம்பு, அக்கினிக் குழம்பு..” என்ற வடிவேலுவின் வசனம் கேட்டு மெய் சிலிர்த்தேன்.karunanithi_alagiri

நான் சொன்னதால் முந்தைய தேர்தலில் விஜயகாந்துக்கு நல்ல போட்டியாக திமுகவில் வடிவேலு பிரச்சாரம் செய்தார். அதிமுக வெற்றி பெற்றதால், பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கி இருந்த அவரை நான்தான் ஜீவனாம்சம் கொடுத்து வாழவைத்துக் கொண்டிருக்கிறேன். திமுகவில் எனக்கு என் அப்பா கருணாநிதி ரீஎன்ட்ரி கொடுப்பாரா என்று எனக்குத் தெரியாது. ஆனால் வடிவேலுவை வைத்து கொஞ்சம் காமெடி செய்தால் எப்படியும் மனது மாறி என்னை ஏற்றுக் கொள்வார் என எனக்குத் தோன்றியது. சமீபத்தில் கலைஞரை நான் சந்தித்தபோது எதையாவது செய்து இடைத்தேர்தலில் திமுகவை வெற்றி பெற வைத்தால் என்னால் மறுபடியும் ஏற்றுக்கொள்வதாக கூறினார். எனவே உடனே தலைவர் கலைஞரிடம் முன் மொழிந்தேன். தீப்பொறி ஆறுமுகம் மறைவுக்கு “திமுகவின் டிராகன் – தீப்பொறி” என்ற தலைப்பில் இரங்கற்பா எழுத எத்தனித்த அவர், ஏற்கனவே உடலில் கொப்புளங்கள் இருப்பத்தால் கொதிக்கும் பேனாவை தூக்கி வீசிவிட்டு, உடனிடியாக என் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். அந்த திரைப்படத்தில் வடிவேலு பேசிய வசனத்தில் ஒரு கரண்டி அக்கினிக் குழம்பை அள்ளி ஊற்றினால் போதும் இந்த இடைத் தேர்தலில் மூன்று தொகுதிகளிலும் வெற்றிக்கனி பறிப்போம், பிறகு நான் திமுகவில் சேர்வது உறுதி என்று உற்சாகமாக கூறினார்.

There are no comments yet