புதுடில்லி/சென்னை : 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் நவம்பர் 9ம் தேதி முதல் செல்லாது எனவும் டிசம்பர் 30-ம் தேதிக்குள் இவற்றை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகளை நாட்டு மக்களுக்கு வெளியிட்டார் பிரதமர் மோடி. ஊழல், கருப்புபணத்திற்கு எதிரான இந்த போரில் மக்கள் ஒத்துழைக்குமாறும் வலியுறுத்தினார். எல்லையில் பாக். ராணுவம்,பயங்கரவாதிகளால் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடி , மத்திய அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார். பின்னர் முப்படை தளபதிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து இன்று (நவ.,8) நள்ளிரவு 12 மணி முதல் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். டிச.,30க்குள் பழைய நோட்டுகளை வங்கி மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் அவர் அறிவித்தார். .

மோடியின் இந்த அறிவிப்பைக் கேட்டு திமுக தலைவர் கருணாநிதி மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதற்காக தெரிகிறது. நிதி கொடுக்க வரும் உடன் பிறப்புகளுக்கு , நிதியை 100 ரூபாய் நோட்டுகளாக மட்டும் கொடுக்கவேண்டி உடனே கடிதம் எழுத இருப்பதற்காக தெரிகிறது. இது குறித்து கோபாலபுர வட்டாரங்கள் கூறியதாவது: நேற்று இந்த அறிவிப்பு டிவியில் வந்தபோது தலைவர் உடல்நலமின்றி அசதியாக தூங்கிக் கொண்டிருந்தார். அனால் அறிவிப்பை தூங்கும்போதே கேட்டிருப்பார் போல், உடனே அதிர்ச்சியில் துள்ளிக் குதித்து எழுந்து, குடும்ப உறுப்பினர்கள் அனைவர்க்கும் தனது பெர்சனல் அலை பேசியில் அரை மணிநேரம் பேசினார். அநேகமாக அனைவரையும் தனித் தனியே சந்திப்பார் என நினைக்கிறேன்.black-money-narendra-modi

குடும்பத்தினருக்கான பெரும்பாலான சொத்துக்கள் ரியல் எஸ்டேட்டிலும், வெளிநாடுகளிலும், குட்டித் தீவுகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இடைத் தேர்தலை முன்னிட்டு பட்டுவாடா செய்வதற்காக கணிசமாக 1000, 500 ருபாய் நோட்டுகள் முன் கூட்டியே எடுத்து வந்துள்ளதை என்ன செய்வது என்று தெரியவில்லை. தேர்தல் கமிஷன் ஒத்துழைத்தால் வாக்காளர்களுக்கு காசோலையாக பணம் பட்டுவாடா செய்யலாம் என்று தலைவர் நினைக்கிறார்.

இது தவிர குடும்ப உறுப்பினர்களிடம் பணமாக எவ்வளவு உள்ளது, அதை எவ்வாறு வங்கிகளில் கணக்கு காட்டலாம் என்று ஆலோசனை செய்ய இந்தியா முழுவதிலும் உள்ள பிரபலமான ஆடிட்டர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்கு அறிவாலயத்தில் அல்லோகல்லோகம்தான் என்று அங்காலாய்த்தார்.

There are no comments yet