புது டெல்லி: நாட்டில் கருப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்க மத்திய அரசு வரலாற்று சிறப்பு மிக்க திடீர் முடிவை எடுத்துள்ளது. அதன்படி ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அரசு அழிக்க உள்ளதாகவும், எனவே நவம்பர் 8ம் தேதி 2016 நள்ளிரவு 12 மணியுடன், அந்த நோட்டுக்கள் செல்லாது எனவும் அவர் தெரிவித்தார். அதேநேரம், அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களில் வரும் 11ம் தேதி நள்ளிரவு வரை நோட்டுக்கள் பெறப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை அனைத்து வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ்களில் வரும் டிசம்பர் 30ம் தேதிக்கு முன்பாக கொடுத்து, புதிய வகை ரூபாய் நோட்டுக்களாக அவற்றை மாற்றிக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனவே மக்கள் தங்களிடமுள்ள 500 ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 30ம் தேதிக்குள் மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதற்கு பதிலாக புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூ.500 மற்றும், ரூ.2000 முக மதிப்பிலான நோட்டுக்களை அரசு சப்ளை செய்ய உள்ளது. இது பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. எனவே கள்ள நோட்டு புழக்கத்தையும், பண பதுக்கலையும் தடுக்க முடியும் என கூறப்படுகிறது. ரூ.2000 நோட்டுக்களில் அதிநவீன லேயர்கள் இருப்பதால் செயற்கைக்கோள் மூலமாக கூட அவற்றை கண்காணித்து பதுக்கலை தடுக்க முடியும் என்று ஒரு தகவல் உலவி வரும் நிலையில் பிரதமர் அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. சென்னையில் பல இடங்களிலும் மோடியின் அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீட்டில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற அலை பாய்ந்ததைக் காண முடிந்தது. மொத்தக் கடைகள் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்ற மக்கள் சில்லறைகளை மாற்றுவதைப் பார்க்க முடிந்தது. திடீரென மக்கள் 500, 1000 ரூபாய் நோட்டுக்களுடன் வந்ததால் கடைக்காரர்கள் குழம்பிப் போய் விட்டனர். விஷயம் தெரிந்ததும் அவர்களும் அதிரச்சி அடைந்தனர்.

இது குறித்து நமது கப்ஸா நிருபரின் ஸ்கைப் மூலம் வந்த மோடி கொடுத்த எமர்ஜென்சி பேட்டியில் கூறியதாவது: நான் அடிக்கடி வெளிநாடு பயணம் சென்று விடுவதை கிண்டல் செய்தும், எனது மத வெறி அரசியல், சர்வாதிகாரப் போக்கினை விமர்சித்தும் சமூகத்திலும் சமூக வலைத் தளங்களில் என் மீது விழுந்துள்ள கரும்புள்ளியை போக்கவே இந்த பொருளாதாரத்தின் மீதான “சர்ஜிக்கல் ஸ்டிரைக்” நிகழ்த்தியுள்ளேன். டில்லியில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள காற்று மாசு பிரச்சினையை மூடி மறைக்கவே இந்த காசு பிரச்சனையை அவசர அவசரமாக கிளப்பி விட்டேன். தீபாவளி பரிசாக மக்களுக்கு காஸ் விலையை 40 ரூ. வரை ஏற்றி சந்தோஷப்படுத்தினேன். பிறகு பெட்ரோல் டீசல் விலை ஏற்றம். எத்தனை நாளைக்குத்தான் விவசாயிகள் தற்கொலையை பார்த்து ரசிப்பது, போரடித்துவிட்டது. அதானால் நடுத்தர மக்களை கொஞ்சம் சீண்டிப்பார்க்க இந்த கரன்சி அட்டாக். தற்போது நிகழ்ந்து வரும் அமெரிக்க தேர்தலில் அந்த நாடு வோட்டுக்களை எண்ணுகிறது, நான் இந்தியா மக்களை நோட்டுக்களை எண்ண வைத்து ரசிக்கிறேன். modi-bj-pti-l“பிச்சைக்காரன்” படத்தில் ஒரு காட்சி வரும். அதில் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்ய வேண்டும் என்று ஒரு பிச்சைக்காரர் ஐடியா கொடுப்பார். “பிச்சைக்காரன்” தலைப்பு எனக்குப் பிடித்திருந்ததால் நான் இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்தேன். அதன்படி 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழித்தால் நாட்டில் வறுமை ஒழியும், பிச்சைக்காரர்களே இருக்க மாட்டார்கள் என்று ரேடியோவில் ஐடியா தருவார் ஒருவர். அடடா புள்ளி விவரத்துடன் பேசுகிறாரே என்று பார்த்தால் கடைசியில் அவர் பிச்சைக்காரராக இருப்பார். அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு ஏடிஎம், வங்கிகள் இயங்காமல், உண்ண உணவு கூட கிடைக்காமல், நடுத்தர ஏழை எளிய மக்கள் கையில் 500 1000 ரூபாய் நோட்டுக்களை வைத்துக்கொண்டு பிச்சைக்காரர்களாக அலைந்தாலும் பரவாயில்லை, எனக்கு அரசியல் பரபரப்பும் விளம்பரமும் தான் முக்கியம் என்றார்.

பகிர்

There are no comments yet