சென்னை: தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு வரும் 19ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த மூன்று தொகுதிகளின் தேர்தலை மக்கள் நலக்கூட்டணி புறக்கணித்துள்ளது. இருப்பினும் தே.மு.தி.க. ஆதரவு கேட்டால் அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மக்கள் நலக் கூட்டணி சார்ந்த கட்சிகள் கூறின. கேட்டுப் பெறுவது சுயநலம், பொது நலம் என்றால் தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தேமுதிகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பிரேமலதா கூறினார். இதையடுத்து தேர்தலில் தேமுதிகவை ஆதரிப்பதாக இல்லை. ம.ந.கூட்டணியின் முடிவே எங்கள் முடிவு” என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

இவ்வாறு குழப்பத்தில் இருக்கும் ம.ந.கூ – கேப்டன் கட்சி உறவு குறித்து மேலும் விபரமறிய நமது கப்ஸா நிருபர் கேப்டன் விஜயகாந்தை சந்திக்க முயன்றபோது, அவர் என்னை சந்திக்காதீர்கள், நான் ஏதாவது ஏடா கூடமாக உளறி விடுவேன். பிரேமலதாவை சந்தியுங்கள் என்று தொலைபேசியில் கூற, வேறு வழியின்றி நிருபர் பிரேமலதாவை சந்தித்தபோது அவர் கூறியதாவது:ஜெயலலிதாவிடம் கட்டிங் வாங்கிய வைகோ “விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது தவறு என்று” கேப்டனை அவமானப்படுத்தும் விதமாக பேசி தேமுதிகவின் எதிர்காலத்தை சிதைக்கப் பார்க்கிறார். அது பற்றி நான் விளக்கம் அளிக்க தேவை இல்லை. பேஸ்புக் மீம் கிரியேட்டர்கள் கேப்டன் குறித்து மேலும் டேமேஜ் பண்ணிவிடுவார்கள்.
முதல்வர் பதவிக்கு லாயக்கில்லாதவர் கேப்டன் என்பது அவர் முந்தைய ஆட்சி காலத்தில் சட்ட சபையில் எதிர்க்கட்சியாக இருந்த போது சாதித்த மவுனமும், தேர்தல் பிரச்சாரத்தில் மக்களுக்கு புரியாத ஆப்பிரிக்க மொழியில் பேசியதன் மூலமும் தெள்ளத் தெளிவாகி vijayakanthவிட்டது. அதுபோல விசிக மற்றும் இடது சாரிகள் ஆதரவு கேட்டால் பரிசீலிக்கப்படும் என்று கூறிவிட்டு வைகோவிடம் கட்டிங்கில் கமிஷன் வாங்கிக் கொண்டு எங்களை நட்டாற்றில் விட்டுவிட்டனர். வழக்கம் போல் கேப்டன் தன் பங்குக்கு ‘கட்டிங்’ போட்டு விட்டு வீட்டில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார், நான் வீதிவீதியாக வேனில் பிரசாரம் மேற்கொண்டுள்ளேன். பிரிந்து சென்ற மநகூ கட்சிகள் நாங்கள் கேட்காமலே ஆதரவு கொடுத்திருந்தால் அதை அன்பளிப்பாக் ஏற்றிருப்போம். “கொடுத்து வாங்கினால் அன்பளிப்பு, கேட்டு வாங்கினால் பிச்சை” என்று சொல்வார்கள்.. கூட்டணி கொள்கை எல்லாம் தேமுதிக விற்கு ஒத்து வராது, அதற்கு தெளிவான சிந்தனை இருக்கவேண்டும்.. சதா சர்வகாலமும் சரக்கடிக்கும் கேப்டனிடம் அதை எதிர்பார்ப்பதும் தவறு.. ஆகவே மக்களே, நேரடியாகவே கேட்கிறேன், கேப்டனுக்கு இந்த முறையாவது டெபாசிட் பிச்சை போடுங்கள்.. இந்த மூன்று தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெற்றால், மக்களுக்கு தேமுதிக வின் அன்பளிப்பாக, ஒவ்வொரு வீட்டில் உள்ள உறுப்பினர்களுக்கும் ஒரு 90 கட்டிங்கும் ஊறுகாய் பாக்கெட்டும் வழங்க ஆவன செய்வேன்.” என்று கூறியுள்ளார்.

There are no comments yet