நியூயார்க்/ சென்னை: சர்வதேச அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட தொழிலதிபர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 45-வது அதிபர் ஆகிறார். 50 மாகாணங்களில் 270 தேர்வாளர் வாக்குகளை கைப்பற்றி வெற்றி பெற்றால் அதிபர் பதவி என்ற நிலையில், டொனால்டு ட்ரம்ப் 279 தேர்வாளர் வாக்குகளை கைப்பற்றினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் 218 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக வேட்பாளர் ஹிலாரியே வெற்றி பெறுவார் என சிஎன்என், ஃபாக்ஸ் நியூஸ் கருத்து கணிப்புகள் சொல்லி வந்தாலும் அத்தனை கருத்து கணிப்புகளையும் பொய்யாக்கும் விதமாக ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிய நாட்களில் ட்ரம்ப்பின் மீது வரிசையாக தொடர்ந்து பெண்கள் பலர் பாலியல் குற்றச்சாட்டுகளை தொடுத்தனர். அதில் நீலப்பட நடிகை ஜெசிக டிரேக் உட்பட 11 பெண்கள் அடங்குவர். இந்தக் குற்றச்சாட்டையே ஜனநாயகக் கட்சி தங்களுக்குக் கிடைத்த பெரும் ஆயுதமாகக் கொண்டு தொடர்ந்து பிரச்சரம் செய்து வந்தது. இதுவே ட்ரம்ப் – ஹிலாரி பங்கேற்ற விவாதங்களிலும் எதிரொலித்தது.trump

இத்தனை எதிர்ப்புகளையும் மீறி வெற்றி பெற காரணமாக இருந்த இந்திய வம்சாவளி தொண்டர் ஒருவர் 10ஆயிரம் வாலா சீனப் பட்டாசு வெடித்தபடி நமது கப்ஸா நிருபருக்கு ஸ்கைப்மூலம் கொடுத்த பேட்டியில் கூறியதாவது: எங்க தலைவர் டிரம்புக்கும் நம் தமிழின தலைவர் கலைஞருக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. ரியல் எஸ்டேட்டில் பெரும் பணக்காரர், பல்லாயிரம் கோடி வைத்துள்ளார். பல பெண்களுக்கு திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்வளித்து உள்ளார். தொலைக்கட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார். தமிழ் நாட்டில் ஜெயாவுக்கும் கலைஞருக்கும் நடந்த பனிப்போரை போல அமெரிக்காவில் டிரம்ப் ஹிலாரி இடையே நடந்த அதர்ம யுத்தத்தில் வாயாலேயே அறிக்கைகளையும் பொய்யான வாக்குறுதுகளையும் வாரி வழங்கி மக்களை கலைஞர் போலவே முட்டாளாக்கி வெற்றி பெற்று உள்ளார். அதனால் தான் அவருக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தோம். அன்னாரின் வெற்றியை கொண்டாடும் வகையில் திமுக ஸ்டைலில் பிளெக்ஸ் பேனர் அடித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ய உள்ளோம். இனி ஒவ்வொரு நாளும் ஒயிட் அவுசுக்கு போகும் போது போக்குவரத்தை நிறுத்தி மக்களை அல்லோல கல்லோலப் படுத்துவோம். 11 பேர் கொண்ட குழுவை வைத்து, ”அமெரிக்காவின் அறிவாலயமே’ ‘பெண்களின் (கா)ஆர்வலரே’ ‘ஹிலாரிக்கு சங்கு ஊதிய ட்ரம்பெட்டே’ போன்ற வாசகங்களை எழுத வைத்து சுவரொட்டிகள் அடித்து சிங்கார சென்னையை சீரழித்தது போல அமெரிக்கவின் தெருக்களின் அழகை சிதைப்போம், கண்ணகி சிலை போல சுதந்திர தேவி சிலையை கட்டிக் காப்போம். எங்கள் கொண்டாட்டங்கள் பற்றிய விவரங்கள் பேஸ்புக்கில் வெளியிட உள்ளோம். ஓய்வுக்கு ஓய்வு கொடுத்த கலைஞர் போல உலகம் முழுவதும் ஊழலுக்கு புது உருவை கொடுத்து தமிழின தலைவர் போல மொத்த மனித இனத்தின் மாபெரும் தலைவராக ட்ரம்பின் புகழை செவ்வாய் கிரகம் வரை கொண்டு செல்வோம் என்று கூறி பிளெக்ஸ் பேனர் அடிக்க விரைந்தார்.

பகிர்

There are no comments yet