சென்னை:அண்ணா அறிவாலயம் வளாகத்தில் உள்ள, தி.மு.க., அறக்கட்டளைக்கு சொந்தமான கட்டடங்களுக்கு, 73 லட்சம் ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இன்னும், 72 லட்சம் ரூபாய் வரியை, அறக்கட்டளை நிலுவை வைத்துள்ளது. மொத்தம், 1.5 கோடி ரூபாய் அளவிற்கு, தி.மு.க., அறக்கட்டளை சொத்து வரி செலுத்த வேண்டும். இதில், சில தினங்களுக்கு முன், 72 லட்சத்து, 95 ஆயிரத்து, 761 ரூபாய் மட்டும், அந்த அறக்கட்டளை, கடந்த, 2013 – 14ம் நிதியாண்டில், முதல் அரை யாண்டு வரை, தி.மு.க., அறக்கட்டளையிடம் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த ஆண்டின் இரண்டாம் அரையாண்டு முதல், நடப்பாண்டு வரை, மொத்தம், ஏழு அரையாண்டு களுக்கான வரி பாக்கி உள்ளது.இது, ரூ.72 லட்சம் வரை இருக்கும் என,அதிகாரிகள் தெரிவித்தனர்.karuna

இது குறித்து இன்று தனது உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளதாவது: உடன்பிறப்பே தம்பி உனக்கு ஒன்றை நினைவூட்டுகிறேன் அண்ணா மூன்றெழுத்து, அவர் பெயரில் சென்னை மூன்றெழுத்து, தேனாம் மூன்றெழுத்து, பேட்டை மூன்றெழுத்து, பகுதி மூன்றெழுத்து, அறிவு மூன்றெழுத்து, ஆலயம் கட்டினால், மாளிகை மூன்றெழுத்து, என கூறி சொத்து மூன்றெழுத்து, ரூபாய் மூன்றெழுத்து, வரி நிலுவை மூன்றெழுத்து, கட்ட வேண்டும் பாக்கி மூன்றெழுத்து, என மானம் மூன்றெழுத்து கேட்ட மூன்றெழுத்து, இந்த மூன்றெழுத்து, அரசு மூன்றெழுத்து, திமுக மூன்றெழுத்து, மீது புகார் மூன்றெழுத்து செய்யும் மேயர் மூன்றெழுத்து. ஜப்தி மூன்றெழுத்து செய்ய முடியுமா? நாம் விடும் சவால் மூன்றெழுத்து. ஆட்சி மூன்றெழுத்து மாறினால் நம்மக்கு வெற்றி மூன்றெழுத்து. எனவே இந்த அப்பல்லோ அம்மையாரின் அரசின் மிரட்டலை கண்டு பயப்படாதே. நம்மிடம் மூட்டை மூட்டையாக இருக்கும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை கொண்டு இந்த சவாலை முறியடித்து அறிவாலயத்தையும் நமது மானத்தையும் மீட்டிடுவோம். ஆனால் நீ எனக்கு நிதி தரும்போது புது 2000 ரூபாய் நோட்டாக மட்டும் தர மன்றாடி கேட்டுக் கொள்கிறேன் என்று அந்தக் கடித்ததில் கூறியுள்ளார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட உதயநிதி ஸ்டாலின் தனது ஹம்மர் காரை விற்று கட்சி மானத்தை காப்பாற்ற முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

There are no comments yet