ஜப்பான்/டோக்கியோ: கடும் சிரமத்துக்கு இடையே அரசுக்கு ஆதரவு அளித்து வரும் நாட்டு மக்களுக்கு தலை வணங்குகிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி இரவு 8 மணிக்கு அறிவித்தார். இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகினர்.

இந்த நிலையில், பிரதமர மோடி கூறியிருப்பதாவது, ரூபாய் நோட்டுகளை மாற்ற கடும் சிரமத்துக்கு இடையே மத்திய அரசுக்கு ஆதரவு அளித்து வரும் மக்களுக்கு தலை வணங்குகிறேன்.

இந்த அதிரடி அறிவிப்பு குறித்து ரகசியம் காக்கவில்லை. பண நோட்டுகள் குறித்த ரகசியத்தை நான் முன்பே அம்பானியிடம் மட்டும் தெரிவித்தேன். அவர் அவரது மற்ற அரசியல், தொழில் நண்பர்கள், பகிர்ந்திருந்தால் அதற்கு நான் பொறுப்பு ஏற்க முடியாது. பழைய நோட்டுக்களை செல்லாது என்று அறிவிப்பது குறித்து அம்பானி, அதானி மற்றும் விஜய் மல்லையாவிடம் தீவிரமாக ஆலோசித்தே முடிவெடுக்கப்பட்டது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு ஜப்பானில் இருந்து மோடி பதில் அளித்துள்ளார்.

There are no comments yet