புதுடெல்லி: மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காகவும், டெபாசிட் செய்வதற்காகவும் பொதுமக்கள் வங்கிகளில் குவிந்துள்ளனர். பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் பூட்டி கிடக்கின்றன, வங்கிகளுக்கு வருவோரின் எண்ணிக்கை இரண்டாவது நாளாக இன்று மேலும் அதிகரித்தது. இந்நிலையில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி டெல்லி பாராளுமன்ற வீதியில் உள்ள ஸ்டேட் வங்கி ஒன்றில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று ரூ.4 ஆயிரத்தை மாற்றி சென்றார். அப்போது அவருடன் வரிசையில் நின்றவர்கள் ராகுல் காந்தியுடன் செல்பி எடுத்து கொண்டனர். இது குறித்து ராகுல் காந்தி நிருபர்களிடம் கூறுகையில், “மக்களோடு மக்களாக நின்று அவர்களின் துயுரத்தை பகிர்ந்து கொள்ளவே வரிசையில் நின்றேன். மக்களின் சிரமத்தை உணர்கிறேன். மத்திய அரசின் இந்த 500 ரூபாய் 1000 ரூபாய் தடை சட்டம் சாமான்ய மக்களுக்கு பயன்படப்போவது இல்லை. இது பணக்காரரகளுக்குதான் பலன் தரும், சாமான்யர்களுக்கு சிரமத்தைத்தான் கொடுக்கும். எந்த கோடீஸ்வரர்களும் வரிசையில் நிற்கவில்லை. பிரச்சனைகளை சந்திக்கும் சாமான்ய மனிதன்தான் நிற்கிறான். இந்த அரசாங்கம் 15-20 கோடீஸ்வரர்களுக்காக செயல்படக்கூடாது, சாமானியர்களுக்காக செயல்பட வேண்டும்” என்று புலம்புவது போல நடித்துக் காட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மௌன மொழியில் பேட்டியளித்த ராகுல் கூறியதாவது: திடீரென 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை கேட்டதும் காங்கிரஸ் கட்சியினருக்கு “கை” யும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. நானும் எங்க அம்மாவும் கஞ்சி காய்ச்சி குடிக்க கூட காசில்லாததால் இரண்டு நாட்களாக பட்டினி கிடக்கிறோம். புஜ் நிலநடுக்கம், ஒரு சுனாமி, போன வருடம் சென்னையை புரட்டிப்போட்ட மழை மூன்றும் சேர்ந்து வந்தது போன்ற ஒரு நிலையில் இருக்கிறோம். நான் வரும் வரை மக்கள் சிரமமின்றி பழைய நோட்டுகளை மாற்றி சென்றனர். நான் வந்ததால் வங்கியில் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் கூடியிருந்தவர்களும், அவ்வழியே சென்றவர்களும், வங்கிப் பணியாளர்கள் சிலரும் என்னுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இதனால் புதிய நோட்டு வழங்கும் நிகழ்வு தடைபட்டாலும், எங்களது வருங்கால வாக்கு வங்கி ஓட்டுகளால் நிரம்பும் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் மலரும் என்று நம்புகிறான் என்றார். மக்கள் கையில் பணமிருந்தும் குடிக்க கஞ்சி இல்லாமல் எங்கள் குடும்பம் போல சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள். எனவேதான் நானும் அவர்களோடு சேர்ந்து கஞ்சி காய்ச்சி குடிக்க பணத்தை மாற்றி குருணை அரிசி வாங்க வரிசையில் நிற்கிறேன் என்றார்.rahulgandhi

ராகுலை பார்க்கவும் செல்ஃபி எடுக்கவும் நின்றவர்கள் முந்தியடித்ததால், தள்ளுமுள்ளு ஏற்படவும் பத்திரிகை புகைப்படக்காரர்களும், டி.வி. கேமராமேன்களும் விலகி நிற்க வேண்டும் என்பதற்காக, ராகுல் காந்தி நின்ற வரிசையை சுற்றிலும் சிறப்பு பாதுகாப்பு படையினரும், துணை ராணுவத்தினரும், போலீஸ் படையினரும் பாதுகாப்பு வளையம் அமைத்தனர். சற்று நேரத்தில் அந்த இடம் காங்கிரஸ் பிரச்சார கூட்டம் போல காணப்பட்டது. ராகுல் காந்தி 40 நிமிடம் வரிசையில் நின்று தான் மக்கள் படும் சிரமத்தை ரசித்தபடி பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். பின்னர் தான் வைத்திருந்த பழைய ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை மாற்றினார். ராகுல் காந்தி வங்கியில் இருந்து புறப்பட்டு சென்ற பின்னர் பொதுமக்களில் ஒருவர், ’சாமானிய மக்களின் பெயரால் இவர்கள் ஏன் இங்கு வந்து அரசியல் செய்கிறார்கள்?’ என தலையில் அடித்துக் கொண்டது பார்க்க பரிதாபமாக இருந்தது

பகிர்

There are no comments yet