புது டெல்லி: கோவா விழாவில் ரூ.500, 1000 வாபஸ் பெறப்பட்டது குறித்து பிரதமர் மோடி ஆவேசமாக பேசியதாவது: பிரதமர் நாற்காலியில் அமருவதற்காக நான் பிறக்கவில்லை. 70 ஆண்டுகளாக கொள்ளையடித்தே வாழ்ந்து விட்டனர். 70 ஆண்டுகளாக இருந்த கறுப்பு பண நோய் 17 மாதத்தில் தீர்ந்து விட்டது. இன்று 2 ஜி ஊழல் புரிந்தவர்கள் எல்லாம் உங்களை ஏமாற்ற உங்களுடன் ஏ.டி.எம்.,மில் வரிசையில் நிற்கின்றனர். ஏடிஎம்.,களில் வரிசையில் நிற்கும் மக்கள் மத்திய அரசிற்கு எதிரான நிலைப்பாட்டிற்காக நிற்கவில்லை. நாட்டை காக்க வேண்டும் என்பதற்காக, கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக நிற்கிறார்கள். கறுப்பு பணத்தை ஒழிக்கும் போராட்டத்தில் என்னுடன் இணைய வாருங்கள். இந்த நடவடிக்கையால் பணத்தை இழந்து, பாதிக்கப்பட்டவர்களே வதந்திகளை பரப்பி விடுகிறார்கள். அவர்கள் எனக்கு எதிராக நடவடிக்கைகளை செய்வார்கள், என்னை அழிக்க நினைக்கலாம். இவர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எதற்கும் நான் தயாராக உள்ளேன். என பேசினார்.
மேடையை விட்டு இறங்கிய மோடியை ஜோல்னாப் பை அணிந்த ஒருவர் தனியாக சந்தித்து கடுமையான வாக்கு வாத்ததில் ஈடுபட்டார். நமது கப்ஸா நிருபர் விசாரித்ததில், அவர் மோடி பேசிய உணர்ச்சிகரமான உரையை எழுதிக் கொடுத்தவர் என்ற அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வந்தது. கோவாவில் வந்து கோபத்தை கிளறிய அந்த ஜோல்னாப் பை ஆசாமியை சமாதானம் சொல்லி அனுப்பிய பிறகு பேசிய மோடி கூறியதாவது: 8ம் தேதி நிம்மதியின்றி தூங்காதவர்களின் லிஸ்டில் நானும் ஒருவன். இசட் பிரிவின் பாதுகாப்பு இருப்பதால் என் உயிருக்கு ஆபத்து அவ்வளவு சுலபமாக வராது. இந்த கொடும்-பாவியின் “கொடும்பாவியை” வேண்டுமானால் எரித்துக் கொ(ல்)ள்ளுங்கள். நாட்டில் முதல் முறையாக வீட்டு செலவுக்கும் வெங்காயம் வாங்கவும் மக்கள் ஏற்கனவே வங்கிகளில் இருந்து எடுத்து வைத்திருந்த 5000 கோடி வங்கிகளில் மீண்டும் டிபாசிட் ஆகியுள்ளது. பூட்டான் லாட்டரி சீட்டை நினைவு படுத்தும் விதமாகவே 2000 ரூபாய் நோட்டை வடிவமைக்க சொன்னேன். அது சொதப்பி விட்டது. “உனக்கு எனக்கு என அனைவரும் போட்டி போட்டு வாங்கும் 2000 நோட்டு, பூட்டான் லாட்டரி சீட்டு” என்று அனைவரும் என்னை கிண்டல் செய்கின்றனர். இப்போது சண்டை போட்டுவிட்டு போனவர்கூட 50 ரூபாய் சம்பள பாக்கிக்காக வந்தவர் தான். சொந்தப் பணம் பழைய 1000 ரூபாயை மாற்ற ஐடி புரூஃப் வைத்துக் கொண்டு ஊர் ஊராக அலைகிறேன், ஏடிஎம்கள் இயங்கவில்லை. வங்கிகளில் கூட்டம் அலைமோதுகிறது. 50 தினங்களுக்கு பிறகு மாற்றிக் கொள்ளலாம் என்று இருக்கிறேன் என்றார்.
There are no comments yet
Or use one of these social networks