புது டெல்லி: மத்திய அரசின் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் ரூபாய் நோட்டு கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். வங்கிகளில் பண பரிமாற்றம் எப்படி நடைபெறுகிறது, ஏன் இந்த பிரச்சினை என்று ஒன்றுமே தெரியாதவர் போல் பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் மூத்த அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி வெங்கையா நாயுடு, மின்சாரம் மற்றும் நிலக்கரி துறை மந்திரி பியூஸ் கோயல் உள்ளோர் இதில் கலந்து கொண்டனர். மைசூரிலிருந்து இரண்டு கன்டெய்னர் லாரிகள் மூலம் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் சென்னை வந்துள்ளதால் இனிமேல் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாசிக்கில் உள்ள அச்சகத்தில் இருந்து முதல்கட்டமாக 50 லட்சம் புதிய 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மைசூருவில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான அச்சகத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் 2 கன்டெய்னர் லாரிகளில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

நிகழ்ச்சிக்குப் பிறகு பேட்டி அளித்த மோடி: எங்களின் பார்ட்டிக்கு சரக்கு வாங்க கூட காசில்லாமல் டீயுடன் நடக்கிறது. ஒட்டு வங்கி பற்றி மட்டுமே அறிந்த எனக்கு வங்கி கணக்கு பற்றி தெரியாததால் தப்பு கணக்கு போட்டு மக்கள் தினசரி வாழ்க்கையில் விளையாடி விட்டேன் அதை சரிக்கட்ட இரண்டு கண்டைனர்களில் 500 ருபாய் நோட்டுகள் அனுப்பி உள்ளேன். இந்த புதிய 500 ருபாய் நோட்டுகளை முன்பே கொடுத்தால் ஒரு பரபரப்பு உண்டாக்க முடியாது என்பதால் 2000 ருபாய் நோட்டுகளை முதலில் விட்டு மக்களை திண்டாட விட்டேன்” என்றார். மேலும் நோட்டு பற்றாவிட்டால் கருப்பை வெள்ளையாக மாற்றுவது எப்படி என்ற ஒரு பட்டியலை தயார் செய்து வெளியிட்டு உள்ளார்.

1. அடிக்கடி கடன் வாங்குபவர்களுக்கு தண்டல்காரர்கள் வட்டியில்லாமல் கடன் வழங்கலாம்.
2. தொழிலாளர்களுக்கு முன்கூட்டியே மாத ஊதியத்தை நிறுவனங்கள் வழங்கலாம்.
3. டாஸ்மாக் ஊழியர்களுடன் ரகசிய கூட்டு வைத்து சில பேருந்து நடத்துநர்கள் மூலம் சில்லறை வழங்கலாம்..
4. சிறிய அளவில் தங்க வியாபாரத்தில் ஈடுபடுபவர்களிடமிருந்து தங்கம் வாங்குவதில் மக்கள் ஈடுபடலாம்.
5. மொத்தமாக பலருக்கு ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்துவிட்டு பின்னர் ரத்து செய்யலாம்.
6. சில தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களிடமும், தொழிற்சாலைகள் ஊழியர்களிடமும் பழைய ரூபாய் நோட்டுகளை அளித்து அவற்றை வங்கிகளில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுத் தருமாறு வலியுறுத்தலாம்.
7. வீட்டு வேலையில் ஈடுபடுபவர்கள், விடுதியில் இருப்பவர்களின் வங்கி கணக்கிலும் சிலர் பணம் போட்டு வைக்கலாம்.
8. தங்களுக்குத் தெரிந்தவர்களின் வங்கிக் கணக்குகள் மூலம் சிறு சிறு தொகையாக டெபாசிட் செய்யலாம்.

9. கோயில் உண்டியல் பணத்தின் மூலமாக சிலர் தங்களது கருப்புப் பணத்தை 20% கமிஷனுடன் வெள்ளைப் பணமாக மாற்றிக் கொள்ல்லாம். சில கோயில் நிர்வாகங்கள் இதற்கு ஒத்துழைப்பு தருகின்றன.
10. சிலர் தங்களிடம் இருக்கும் கருப்புப் பணத்தை தெரிந்தவர்களுக்கு கடனாக வழங்கலாம்.

modi-hand-on-head

11. ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் மூலமாக பணத்தை வங்கியில் செலுத்தி அதனை பிறகு சிறு கமிஷன் தொகையை செலுத்தி பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
12. பணத்தை மாற்றும் மிகப்பெரிய குழுக்கள் ஏற்பாடு செய்துள்ளோம். இவர்கள் 15% முதல் 80% வரை கமிஷன் பெற்றுக் கொண்டு பழைய நோட்டுகளுக்கு பதிலாக புதிய நோட்டுகளை கொடுக்கின்றனர்.
13. கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் விவசாயிகளை நாடி, அவர்கள் மூலமாக வெள்ளைப் பணமாக மாற்றுகிறார்கள். விவசாயிகள் தங்கள் விளை பொருட்கள் மூலமாகக் கிடைத்த பணம் என்று சொல்லி வங்கியில் டெபாசிட் செய்தால் அதற்கு வரி விலக்கு என்பது கூடுதல் விஷயம்.
14. அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்கு மூலமாகவும் ஏராளமான கருப்புப் பணம் வெள்ளைப் பணமாக மாற்றப்பட்டு வருகிறது.
15. ஒரு சிலர் உரிய வரித் தொகையை செலுத்தி தங்களது வங்கிக் கணக்கிலேயே பணத்தை செலுத்தி கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றிக் கொள்கிறார்கள்.
16. சில நிறுவனங்கள், தங்களது ஊழியர்களின் வங்கிக் கணக்கு மற்றும் அடையாள அட்டை மூலமாகவும் கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்க முயற்சிக்கிறார்கள்.
17. ஏற்கனவே 4000 ரூபாய்க்கு புதிய நோட்டுகளை மாற்றிக் கொடுக்க பொதுமக்களுக்கு ரூ.300 கமிஷன் அளிக்கப்பட்டது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. மகிழ்ச்சியளிக்கிறது.
18. மிகப்பெரிய நிறுவனங்கள் தங்களது கான்டிராக்டர்களுக்கு முன்பணமாக மிகப்பெரிய தொகையை கொடுத்து விடலாம்.
19. கட்டுமான நிறுவனங்கள் தாங்கள் வாங்கவிருக்கும் பொருட்களுக்கு முன்பணம் கொடுத்துவிடலாம்.
20. மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் மூலமாகவும் கருப்புப் பணம் வெள்ளைப் பணமாக மாற்றப்படுகிறது.

இவற்றுள் ஏதாவது ஒரு முறையை பின்பற்றி மக்கள் தங்கள் பணத்தை மாற்றி கொள்ளலாம் என்று டி போதையில் மகிழ்ச்சி போங்க கூறினார்

பகிர்

There are no comments yet