புதுடில்லி: வங்கியில் பணம் மாற்ற வருபவர்களில் விரலில் மை வைக்கப்படும் என மத்திய அரசஅறிவித்துள்ளது. வங்கிக்கிளைகள் மற்றும் ஏ.டி.எம்.,களில் கூட்ட நெரிசல் குறித்த ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஒரே நபர்கள் மீண்டும் மீண்டும் வருவது தெரியவந்துள்ளது. வங்கியில் நெரிசலை குறைக்க, தேர்தலின் போது மை வைக்கப்படுவது போல், பணம் வாங்க வருபவர்களுக்கு பணம் வழங்கும் கவுன்டரில் பணம் வாங்குவோரின் விரலில் மை வைக்கப்படும். கறுப்பு பணம் வைத்திருப்போர், ஆட்களை குழுக்களாக அனுப்பி வைத்து வெள்ளையாக மாற்ற முயற்சி செய்கின்றனர்.

பணம் இருப்பு குறித்து, பிரதமர் மோடி , நிதியமைச்சர் ஜெட்லி ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர். பணம் தேவையான அளவு உள்ளதால் மக்கள் பீதியடைய தேவையில்லை. சிறிய மதிப்பு கொண்ட பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய வழிபாட்டு தலங்கள் முன்வர வேண்டும். பொதுத்துறை வங்கிகளில். ஏடிஎம்களில் விரைவாக பணம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் எளிதாக கிடைக்கவும், தேவை, சப்ளை, குறித்து அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. தேவையான அளவு உப்பு கையிருப்பு உள்ளது. திடீர் விலையேற்றத்திற்கு காரணம் இல்லை என்றார்.

narendra-modi1இது குறித்து மோடி நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது:”நானும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இருவரும் நேற்று ஆயிரம் ஐநூறு ருபாய் நோட்டு செல்லாததால் பால் வாங்க காசில்லாமல், பிளாக் டீ குடித்து கொண்டு அத்தியாவசிய தேவைக்கு பணம் எடுக்க வருவோருக்கு எப்படி மேலும் சிக்கல் தருவது என்று தீவிரமாக யோசித்து கொண்டிருந்தோம். பிளாக் டீயை பார்த்ததும் எனக்கு இந்த ஐடியா தோன்றியது. கருப்பு பண ஒழிப்பு எனது குறிக்கோள் என்பதால் பணம் எடுக்க வருபவர்களுக்கு கைவிரலில் கருப்பு மை வைக்க சொல்லி உத்தரவிட்டுள்ளேன். தேர்தலில் எங்களுக்கு அடியாட்கள் போடுவது கள்ள ஒட்டு ஆனாலும், தேவைக்கு அப்பாவி மக்கள் மாற்ற வருவது கள்ள நோட்டு ஆகி விடக் கூடாது என்பதால் இந்த ஏற்பாடு. வங்கியில் பாஜகவை சேர்ந்தவர்கள் இந்த பணியை செய்வார்கள். இதன்மூலம் பாஜக விற்கு ஓட்டு போட்டவர்கள் மட்டுமே பணத்தை பெற முடியும். இந்த திட்டமும் சரிப்பட்டு வரவில்லை என்றால் தாமரை சின்னத்தை கையில் பச்சை குத்தும் வன்கொடு’மை’ நிகழ்த்தவும் தயங்க மாட்டேன் ” என்று ஆவேசமாக பேசினார்.

பகிர்

There are no comments yet