புது டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். மேலும் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என கூறினார். இதையடுத்து புதிய ரூ.2000 நோட்டுக்கள் சப்ளையாகியுள்ளன. புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பல சிறப்பு அம்சங்களுடன் அச்சிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்தநிலையில் நேற்று பிரபல தனியார் மராத்தி டி.வி. செய்தி சேனல் ஒன்றில் புதிய 2 ஆயிரம் நோட்டில் சாயம் போவதாக செய்தி ஒளிபரப்பப்பட்டது. அந்த செய்தியில், ஒருவர் ஈரமான வெள்ளை துணியை வைத்து புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டில் தேய்க்கிறார். அப்போது, அந்த நோட்டில் உள்ள இளம் சிவப்பு கலர் துணியில் படிகிறது. தனியார் டி.வி. சேனலில் வெளியான இந்த செய்தியால் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் உலா வந்தன. அதாவது, புதிய 2000 ரூபாய் நோட்டை, தண்ணீரில் நனைத்தாலோ அல்லது ஈரத்துணியால் தேய்த்தாலோ சாயம் போவதாக, வீடியோ ஆதாரத்துடன் பலர் வெளியிட்டனர்.
இந்நிலையில் இதுபற்றி மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்தி காந்த தாஸ், டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் “புதிதாக வெளியிடப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுகளில் சாயம் போவதற்கு, அதை அச்சிடப் பயன்படுத்தும் மை-தான் காரணம். புதிய 100 ரூபாய் நோட்டிலும், ஈரத்துணி வைத்து தேய்த்தால் சிறிது சாயம் ஒட்டும். எனவே, சாயம் போனால் அது நல்ல நோட்டு, போகாவிட்டால் அது கள்ள நோட்டு” என்று அவர் கூறினார்
இது குறித்து மேலும் விபரமறிய நமது கப்ஸா நிருபர் தனது ஒற்றை 500 ரூபாய் நோட்டை மாற்ற டெல்லி கரோல் பாக் ஸ்டேட் வங்கியில் வரிசையில் நின்றுகொண்டிருந்த பிரதமர் மோடியை பேட்டி கண்டபோது, வரிசையில் நின்று டயர்ட் ஆக இருந்த மோடி முகத்தில் வியர்வையை துடைத்துக்கொண்டு கூறியதாவது: எனது ஓவ்வொரு சாயமாக வெளுத்துக்கொண்டு வருகிறது. மாட்டுக்கறி கலவரத்தின் பொது எனது மதசார்பின்மை சாயம் வெளுத்தது, காவிரி விஷயத்தில் என்னுடைய தேசிய ஒற்றுமை /ஓட்டு வங்கி அரசியல் சாயம் வெளுத்தது. கர்நாடகா ஊழல் பா.ஜ.க. வினரால் என்னுடைய ஊழல் இல்லாத ஆட்சி என்ற சாயம் வெளுத்தது. இந்நிலையில் மல்லையா, அம்பானி, அதானியை விட்டுவிட்டு எளிய மக்களை வதைப்பதால் என்னுடைய கறுப்புப் பண சாயம் வெளுத்து விட்டது. இதை சிம்பாலிக்காக காட்டத்தான் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை சாயம் போவது போல் வெளியிட்டுள்ளோம். சாயம் வெளுத்ததால் என்னுடைய உண்மை முகம் தெரிந்துவிட்டது. அது போல் சாயம் போனால்தான் அவை நல்ல நோட்டுகள் என்று விளக்கம் சொன்னார்.
There are no comments yet
Or use one of these social networks