சென்னை: நம் நாட்டில் 20% பேர் பணக்காரர்கள் இருப்பார்களா? அதில் ஒரு சிலர் செய்த தவறுகளுக்காக மீதமுள்ள 80% மக்கள் என்ன செய்வார்கள்?” என்று மத்திய கருப்பு பண ஒழிப்பு குறித்த 1000 500 ஒழிப்பு குறித்த அரசின் செயல்பாடுகள் மீது அதிருப்தி வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய். பொதுமக்கள் பலரும் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனால் தமிழ் திரையுலகிலும் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. பசிக்கு சாப்பிட முடியாமல், மருந்து வாங்க முடியாமல், வெளியூருக்கு சென்றுவிட்டு வீடு திரும்ப முடியாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். தினமும் கிடைக்கும் 500, 1000-ஐ வைத்துக் கொண்டு சிறு சிறு வியாபாரிகள் முதற்கொண்டு பாதிக்கப்படுகிறார்களோ என்ற எண்ணம் வருகிறது. பேத்தி திருமணத்திற்காக இடத்தை விற்று வந்த பணம் செல்லாது என்றதால் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு போயிருக்கிறார்கள். மருத்துவமனையில் ஒரு சிறு குழந்தை இறந்து போயிருக்கிறது. இந்த மாதிரியான விஷயங்களை தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. இதுவரை யாருமே பண்ணாத, பண்ண யோசிக்காத ஒரு முயற்சிதான் இது. பிரச்சினைக்கு தீர்வாக ஒரு சட்டம் போடுகிறார்கள். அதை அமல்படுத்தும்போது, என்ன பிரச்சினைகள் வரும் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதற்கான வழிகளை முன்பே எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பதுதான் என் தாழ்மையான கருத்து என்று பேட்டி அளித்தார்.

நடிகர் விஜய் கூறிய கருத்திற்கு, சினிமா பிரபலங்கள் அறிக்கை விடுவதை நிறுத்தி விட்டு பொது வெளியில் வந்து ஏழை எளிய மக்களின் கண்ணீர் துடைக்க உதவ வேண்டும் என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். வானதியின் கருத்துக்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் வானதி சீனிவாசனுக்கு கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.vijay-actor

வானதி சீனிவாசன் கருத்துக்கு பதில் அளித்து நடிகர் விஜய் நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: எனக்கு சாலிக்கிராமத்தில் என் அம்மா பெயரில் ஷோபா திருமண மண்டபம், விருகம்பாக்கத்தில் பேம் நேஷனல் திரை அரங்குடன் – சந்திரா மால் என்ற மல்ட்டிப்ளக்ஸ் வணிக வளாகம் மற்றும் போரூரில் மனைவி பெயரில் சங்கீதா திருமண மண்டபம் உள்ளது. நூற்றுக்கணக்கில் என்னிடம் வேலை ஆட்கள் உள்ளனர். இவர்களுக்கு கணக்கில் வ வராமல் குறைத்த சம்பளத்தை பணமாக கொடுக்கிறேன். இது மட்டுமன்றி என்னுடைய ரசிகர் படை தலைவர்களுக்கு அவ்வப்போது 500, 1000 கொடுத்து எனக்கு போஸ்டர் அடிக்கவும், கட் அவுட் வைக்கவும், பால் ஊற்றவும் கொடுக்கிறேன். இதற்க்கெல்லாம் எனக்கும் ஹாட் கேஷ் தேவைப்படுகிறது. நான் அதற்க்கு சினிமா புரடியூசர்களிடம் எப்போதும் 500, 1000 நோட்டுகளாகத்தான் வாங்கி இந்த மாதிரி மக்கள் நல பணிகளுக்கு கொடுப்பது வழக்கம். சமீபத்தில் கூட பைரவா படத்துக்கு சம்பளமாக கணக்கில் வராமலேயே வாங்கிய பழைய 1000 500 நோட்டுகளை வைத்து என்ன செய்வது தெரியாமல் சிரமத்திற்கு ஆளாகி உள்ளேன். அதனால் தான் கொஞ்சம் பேட்டி கொடுத்து பஞ்ச் டயலாக் விட்டால் அட்லீஸ்ட் நான் இருப்பதாவது என் ரசிகர்களுக்கு தெரியும். என்னை உதவ சொல்லும் வானதி சீனிவாசன் அரசியல் பிரவேசம் செய்வதற்கு முன்பு சென்சார் போர்டு உறுப்பினர், நாங்கள் நடித்த பஞ்ச் டயலாக் படங்களை தணிக்கை செய்து வாங்கிய சம்பளத்தில் வாழ்ந்ததை மறந்து பேசுகிறார். இதற்கு மாதா மாதம் நான் ஊதியம் கொடுக்கும் என் ரசிகர் மன்ற பிரதிநிதிகள் பேஸ்புக்கில் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று குமுறினார்.

பகிர்

There are no comments yet