சென்னை: பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி இருக்கும் ‘2.0’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. ரஜினி, அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘2.0’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். லைக்கா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா அதி நவீன தொழில்நுட்பத்தில் மும்பையில் உள்ள யாஷ்ராஜ் ஸ்டூடியோவில் நடைபெற இருக்கிறது. இவ்விழா லைக்கா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யு-டியூப் பக்கத்தில் பிரத்யேகமாக நேரடியாக ஒளிபரப்பபட இருக்கிறது. ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்‌ஷய்குமார், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான், ஏமி ஜாக்சன் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட மொத்த படக்குழுவும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இவ்விழாவை தொகுத்து வழங்கவிருக்கிறார் இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநர் கரண் ஜோஹர்.rajni-2

இது தொடர்பாக வெளியாகி உள்ள போஸ்டரில் ‘எந்திரன்’ ‘ரோபோ’ என்ற எந்த பெயரையும் போடாமல் வெறும் ‘2.௦’ என்று போடப்பட்டிருப்பதை கண்டு குழம்பிய நமது கப்ஸா நிருபர், மோடிக்கு ஐஸ் வைத்து ‘புதிய இந்திய பிறந்துள்ளது’ என்று கூறி கேஷ் மாத்தி வைத்திருந்த இரண்டாயிரம் ஒரு ருபாய் நோட்டுகளை போயஸ் கார்டன் வீடு மொட்டை மடியில் ரப்பர் செருப்பு அழுக்கு லுங்கி சகிதம் சந்தோசமாக பார்த்துக்கொண்டிருந்த ரஜினியை வளைத்து கேட்ட பொது சுமார் ஸ்டார் ரஜினி கூறியதாவது: “ஷங்கருக்கு ‘ன்’ என்ற எழுத்தில் முடியும் தலைப்பு தான் ராசி என்று ஊருக்கே தெரியும் (ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன், அந்நியன், நண்பன்) ஆனால் எனக்கு கலைபோலி பட்டம் வாங்கி தந்த கபாலி, வரலாறு காணாத அளவு கல்லாவையும் நிரப்பியது. அதன் நினைவு வரும் வகையில் தான் படத்திற்கு இந்த தலைப்பு வைக்க சொன்னேன். 2.0 என்றால் 2K அதாவது இரண்டாயிரம் என்று அர்த்தம். எனது ரசிகன் இதை சூசகமாக புரிந்து கொண்டு பாய் தலைகாணியுடன் பட ரிலீஸின் முன்பே புது இரண்டாயிரம் ருபாய் நோட்டுடன் திரை அரங்குகளை நோக்கி படை எடுப்பான் என்ற நம்பிக்கை உள்ளது. எனக்கு ரெண்டு ஸ்டெப் டான்ஸ் மூவ்மெண்ட் போட்டதும் மூச்சு வாங்குகிறது, ஒரு சண்டைக்காட்சி முடிந்ததும் குளுக்கோஸ் ஏற்ற வேண்டி உள்ளது என்பதாலும், எனக்கு பதிலாக ரோபோ ஒன்று படத்தில் நடிப்பதால் பாய்ஸ், ஜீன்ஸ் (ஷங்கரின் தோல்வி படங்கள்) போல ‘ஜெராக்ஸ்’ என்று வைக்கலாம் என்று கூட பேச்சு வந்தது நான் தான் பிடிவாதமாக 2.0 வை பிக்ஸ் செய்தேன். வாழ்க வளர்க புதிய இந்தியா” என்று கோஷமிட்டவாரே வங்கியில் வாங்கி வந்த பழைய ஒரு ரூபாய் நோட்டுகளை எண்ண ஆரம்பித்தார்.

பகிர்

There are no comments yet