மதுரை: 500,1000 ரூபாய் நோட்டு களுக்கு கடந்த 8-ந் தேதி தடை விதிக்கப்பட்டது. இந்த ரூபாய் நோட்டுகளை வங்கி யில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த 9-ந் தேதியில் இருந்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகிறார்கள். ஒரு வாரமாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளின் வாசலில் பொதுமக்கள் காத்துக்கிடக்கின்றனர். 10ம் தேதியில் ஆரம்பித்த இந்தப் பிரச்சனைக்கு இன்னும் தீர்வு ஏற்படாத நிலை உள்ளது. கூடுதல் பிரச்சனையாக இன்றிலிருந்து பணம் மாற்றுவோரின் விரல்களில் அழியாத மை வைக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இதனால் பெரும் சிரமத்திற்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள வங்கியில் பணத்தை மாற்ற வரிசையில் நின்ற மக்களிடம் தோற்கப்போகும் தி.மு.க வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். திருப்பரங்குன்றம் அருகே உள்ளது நல்லூர். அங்குள்ள ஒரு வங்கியில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தனர். அப்போது அங்கு சென்ற மு.க. ஸ்டாலின், காத்திருந்த மக்களிடம் தன்னிடமிருந்த பழைய 500, 1000 ரூபாய்களை கொடுத்து செலவுக்கு வைத்துக் கொள்ள சொன்னார். stalin-at-bank

இதையடுத்து நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டியில் ஸ்டாலின் கூறியதாவது: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் தி.மு.க.வினர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள். பட்டுவாடா செய்ய வைத்திருந்த பணத்தையெல்லாம் மாற்றுவதற்கு வங்கி ஏடிஎம் மையங்களின் முன்பு கால் கடுக்க நின்று செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் முடிவு எங்களின் அன்றாட வாழ்க்கையை புரட்டிப் போட்டு விட்டது. வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய எங்களுக்கு போதிய பணம் கிடைப்பதற்கு மத்திய அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.

There are no comments yet