மும்பை / ஓஸ்மனாபாத்: மகாராஷ்டிர காவல்துறையும், லஞ்ச ஒழிப்புத் துறையும் இணைந்து நடத்திய அதிரடி ரகசிய சோதனையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் தேஷ்முக்கின் காரில் இருந்து மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.1000 நோட்டுகள் கொண்ட ரூ.91.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. இந்தத் தொகைக்கு எவ்வித ஆவணங்களும் இல்லாமல் காரை ஓட்டி வந்த ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார். இது குறித்து ஒமெர்கா காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் தேஷ்முக்குடையதுதான் என்றும், உள்ளாட்சித் தேர்தலில் செலவிட இந்தத் தொகை கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்றும் செய்திகள் உலா வருகின்றன. இந்த நிலையில் ராஜஸ்தான் சட்டப்பேரவை பாஜக உறுப்பினர் பவானி சிங் “ரூபாய் நோட்டு மாற்று நடவடிக்கை அம்பானி, அதானிக்கு குழுமத்திற்கு முன்பே தெரியும்” என்ற பகீர் தகவல் ஒன்றை ஏற்கனவே வெளியிட்டார். சம்பாதித்த பணத்தில் அன்றாட செலவுக்காக வெறும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்ற கால் வலிக்க வங்கியில் மக்களுக்கு மட்டும் விரலில் மை வைக்கும் மத்திய அரசு இதுபோன்ற சம்பவங்களுக்கு என்ன செய்யப் போகிறது என கேள்வி எழுந்துள்ளது.currency

இது குறித்து மேலும் விபரமறியா, மாறு வேஷத்தில் பணத்தை மாற்றுவதற்கு பேங்க் வாசலில் வரிசையில் நின்று கொண்டிருந்த பா.ஜக அமைச்சர் தேஷ்முக்கை நமது மும்பை கப்ஸா நிருபர் கண்டுபிடித்து பேட்டியெடுத்தார், அப்போது அவர் கூறியதாவது: பிரதமர் மோடியால் ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நாட்டில் கலவரம் வெடிக்க காரணமாகலாம் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த செய்தி கேட்டு பாஜக தலைமையிடம் கலக்கத்தில் உள்ளது. பல்லாயிரம் கோடி ஊழல் செய்த அதனை அம்பானி போன்றவர்களுக்கு முன்பே 2000 ருபாய் நோட்டுக்களை மாற்றி கொடுத்தாகி விட்டது. இந்த 91 லட்சம் பசுமாடுகளுக்கு தீவனம் வாங்க வைத்திருதேன் , இப்போது இவை செல்லலாத பணமாகி விட்டதால், இந்த பணத்தையே மாடுகளுக்கு தீவனமாக கொடுக்க காரில் கொண்டு சென்றோம். பழைய சினிமா போஸ்டருக்கு பதிலாக, இந்த செல்லாத பழைய நோட்டுகளை மாடு தின்றால் நல்லது தானே. மாடுகளின் கெட்ட நேரம் இந்த பணம் காவல் துறையால் பிடிபட்டுவிட்டது அதுவும் நல்லதுதான் இந்த சில்லறை பணம் மாட்டியதால், தலைவர் மோடிக்கு நல்ல பெயர் வந்துவிட்டது. அடுத்த கட்டமாக முட்டு வலி முடக்கு வாதம் வந்த முதியோர்களுக்கு மட்டும் 19 நவம்பர் 2016 அன்று நோட்டுகள் மாற்றி தரப்படும். அடுத்த நாள் பால்வாடி சிறுவர்கள் அதற்கடுத்து பக்கவாதம் வந்தவர்கள் என்று நாள் வைத்துள்ளோம். இதன் மூலம் கலவரம் வெடிக்க இயலாது. தேவை பட்டால் இரண்டு மாடுகளை தீக்குளிக்க வைத்து பரபரப்பை உண்டு பண்ணும் திட்டமும் பாஜக விடம் உள்ளது” என்று சீரியஸாக சொன்னார்.

பகிர்

There are no comments yet