சென்னை: இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும், அதற்குப் பதிலாக புதிய 500 மற்றும் 2000ம் ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும் என்றும் கடந்த 8ம் தேதி அறிவித்திருந்தார். நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து மக்களிடையே பணப்புழக்கம் குறைந்து விட்டது. தங்களிடம் உள்ள பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதற்காக நாடு முழு வதும் வங்கிகள் முன்பு மக்கள் காத்து கிடக்கிறார்கள்.

இதே போல் இருப்பில் உள்ள பணத்தை வங்கியில் போடவும், எடுக்கவும் கூட் டம் அலை மோதுகிறது. இதனால் நாடு முழுவதும் வங்கிகள், ஏ.டி.எம். மையங் களில் எப்போதும் நீண்ட வரிசையில் மக்கள் காத்து நிற்கிறார்கள். நோய் வாய்ப்பட்டவர்கள், முதியோர், பெண்களும் வரிசையில் காத்து கிடக்கிறார்கள். இதனால் அவர்கள் பல அசவுகரியங்கள் இன்னல் களுக்கு ஆளாகி உள்ளனர். இதுவரை இப்பணப் பிரச்சினையால் 40 பேருக்கும் அதிகமாக உயிரிழந்துள்ளனர். இதனிடையே பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பை 4500 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதியவர்களுக்கு மட்டுமே பணம் விநியோகம் செய்யப்படும் எனவும், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை அவர்கள் மட்டுமே மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.thirua-ramadass

இந்நிலையில் பணத்தை மாற்ற வங்கிகளில் வரிசையில் நிற்பதில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக வந்த செய்தியை அடுத்து, நமது கப்ஸா நிருபருக்கு இருவரும் கூட்டாக அளித்த பேட்டி: மோடி ஜி இப்படி திடீரென்று 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததில் இருந்து எங்களுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. எங்க சாதி சனங்களிடம் பணமே இல்லை. ஆனா நாங்களும், எங்க குடும்பத்தினரும் அவ்வப்போது ஆட்சியில் இருப்பவர்களின் ‘கை’, கால்களை அமுக்கி காக்காய் பிடித்து கூட்டணியில் சேர்ந்து அமைச்சர் பதவி வாங்கி அனுபவித்தபோது எங்களுக்கு யாராவது 5, 10 (அதாவது 500, 1000) அன்பளிப்பு கொடுப்பார்கள். அந்தப்பணத்தை மோடி இப்போது நாங்கள் அனுபவிக்க முடியாமல் சதி செய்து விட்டார்.

இது பார்ப்பனர்களும், ஆதிக்க சாதிகளும் சேர்ந்து எங்கள் மீது தொடுக்கப்பட்ட போர், இதை நாங்கள் அரிவாள், கோடாரிகளுடன் எதிர் கொள்வோம். எங்களிடம் இருக்கும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை எங்கள் கட்சியினரும் கொடுத்து பேங்க் வாசலில் நிற்கச்செய்து வங்கிகளை முடக்குவோம். பணத்தை மாற்ற வங்கிகளில் வரிசையில் நிற்பதில் எங்கள் கட்சியினருக்கு 70 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியை சந்தித்து முறையிடுவோம் என்று பொரிந்து தள்ளினார் இருவரும்.

There are no comments yet