திருவனந்தபுரம்: தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை ஊர்வசி. இவர் மலையாள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஜீவிதம் சாட்சி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கலந்து கொள்வோரிடம் அவர்களது குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை கேட்டு அதைத் தீ்ர்க்க ஆலோசனை வழங்குவது வழக்கம். இந்நிலையில், சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த ஒரு குடும்பத்தினரை அவர் மிகவும் அசிங்கமாக தரக்குறைவாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. மலையாள தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆண்களை தரக்குறைவாகப் பேசியது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி நடிகை ஊர்வசிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குடித்து விட்டு நிகழ்ச்சியை நடத்துவதாக குற்றச்சாட்டும் உள்ளது.urvasi

சன் டிவியில் வரும் “நிஜங்கள்” பஞ்சாயத்து நிகழ்ச்சியை குஷ்பு நடத்துகிறார். ஜீ தமிழில் “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியை லட்சுமி ராமகிருஷ்ணனும், ஜீ தெலுங்கு தொலைக்காட்சி சேனலில் வரும் “பதுக்கு ஜதகா பன்டி” என்ற குடும்ப பிரச்சனைக்கு தீர்வு காணும் நிகழ்ச்சியை நடிகை கீதா நடத்தி வருகிறார். இது குறித்து நமது கப்ஸா நிருபரை அனுப்பினால் அவரை ஊர்வசி வசை பாடி விடுவார் என்பதால் மலையாளம் தெரிந்த கப்ஸா ‘நிருபியை’ அனுப்பினோம். அப்போது ஊர்வசி கூறியதாவது.. “லட்சுமி ராமகிருஷ்ணன் “என்னமா இப்படி பண்றீங்களேம்மா” என்ற தேசிய சொற்றொடரை உருவாக்கி பிரபலமானார். தெலுங்கு கீதாவோ ஒருபடி மேலே போய் கீதா தனது நிகழ்ச்சிக்கு வந்த ஓரினச் சேர்க்கையாளர்களை திட்டினார். இளம்பெண்ணை பார்த்து நீ எப்படி செக்ஸ் வச்சுக்குவ என டாக்டர் மாத்ருபூதம் ரேஞ்சுக்கு கேட்டு சர்ச்சையில் சிக்கினார். அதனால் பிரபலமானார். குஷ்பு சொல்லவே வேண்டாம் ‘பூங்காத்து திரும்புமா’ ஸ்டைலில் பிரபலங்களை சந்தித்து வருகிறார்.. இவர்கள் யாரும் செய்யாததை செய்யவே ‘கட்டிங்’ போட்டுவிட்டு நிகழ்ச்சியை நடத்துகிறேன். பேதையின் கண்ணீரை போதையில் துடைக்க நினைத்து அது ஆண்களின் வெறுப்பை சம்பாதிக்க வைத்து விட்டது. நாலு சுவத்துக்குள் நடக்கும் விஷயத்தை நாடறிய நாறடிக்க வேண்டுமானால் இந்த மாதிரி சீப் பப்ளிசிட்டி தேவை படுகிறது. கட்டிங் கொஞ்சம் அதிகமாக போட்டுருந்ததால் கைரக்டர் ‘கட்’ சொன்னதை கவனிக்காமல் உளறிவிட்டேன்” உருக்கமாக பேட்டியளித்தார்.

பகிர்

There are no comments yet