சென்னை: நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் இன்று முதியவர்கள் மட்டுமே பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியும் என இந்திய வங்கிகள் சம்மேளனம் அறிவித்துள்ளது. மேலும் மற்ற பணப் பரிவர்த்தனைகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளது. பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி ரூ2.5 லட்சத்திற்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்பவர்கள் தங்களது பான் கார்டு எண்ணை கட்டாயம் சமர்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பை 4500 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதியவர்களுக்கு மட்டுமே பணம் விநியோகம் செய்யப்படும் எனவும், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை அவர்கள் மட்டுமே மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.bank-queue

இந்நிலையில் ஸ்டாலின் முதியவர்களுக்கு மட்டுமே பணம் விநியோகம் செய்யப்படும் என்ற அறிவிப்பை அடுத்து திமுக இளைஞர் அணி தலைவர் மு. க. ஸ்டாலின் சென்னை ஆயிரம் விளக்கு ஸ்டேட் வங்கியில் தனது பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வரிசையில் நின்றதாக நம்பத்தகாத தகவல்கள் கூறியதை அடுத்து ஜெட் வேகத்தில் அங்கு சென்ற நமது கப்ஸா நிருபர் முதியவர்களுடன் கால் கடுக்க நின்று கொண்டிருந்த இளைஞர் அணி தலைவர் ஸ்டாலினை எடுத்த பேட்டியில் ஸ்டாலின் கூறியதாவது: மார்ச் 1, 1953 அன்று பிறந்த எனக்கு இப்போது வயது 63 ஆகிறது, அரசாங்க விதிகளின் படி சீனியர் சிட்டிசன் ஆகிவிட்டேன். அதனால்தான் வங்கிகள் என்னை போன்றவர்களுக்கு சலுகை அளித்து இன்று ஒருநாள் சீனியர் சிட்டிசன் நாளாக அறிவித்துள்ளது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று சுருக்குப் பையில் வைத்திருந்த பழைய 500 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வந்தேன். modimotherஎனது என் அப்பா கலைஞருக்கு 93 வயதாகிறது. சீனியருக்கெல்லாம் சீனியர் அவர், அவர் வரிசையில் நிற்க முடியாது என்பதால் இன்று மாலை கூட்டம் குறைந்தவுடன் வந்து பணத்தை மாற்றுவார். பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் தனது 97 வயதில் பழைய 500 ரூபாய் நோட்டுக்களை மாற்ற நடந்து சென்று வங்கியில் வரிசையில் காத்திருந்து புதிய ரூபாய் நோட்டுகளை வாங்கி சென்றார் என்ற செய்தியைப்படித்து நானும் எனது, அப்பாவும் முதியவர்களுக்கான தினமான இன்று வங்கிக்கு வந்துள்ளோம் என்று கூறினார்.

There are no comments yet