மும்பை: தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பண பிரச்சினையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவின் பெருவாரியான மாநிலங்களில் இன்னும் புதிய 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகள் விநியோகம் தடைபட்டுள்ளது. ஆனால் புதிய 2000 ருபாய் நோட்டுகள் தாராளமாக கிடைத்து வருகின்றன. ஆனால் 2000 ருபாய் நோட்டுக்கு சில்லறை கிடைக்காமல் மக்களும் வியாபாரிகளும் தவித்து வருகின்றனர். புதிய 2000 ரூபாய் நோட்டுக்கு சில்லரை தட்டுபாடு காரணமாக 100 ரூபாய் நோட்டுகளும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. பழைய ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு பின் 10 நாட்கள் கழித்துதான் புதிய 500 ரூபாய் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்தியா முழுவதும் இன்னும் வெளிவரவில்லை. வடமாநிலங்களில் ஒரு சில இடங்களில் மட்டுமே 500 ரூபாய் நோட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மும்பையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் ஒன்றில் முழுமையாக அச்சடிக்கப்படாத புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அந்த ரூபாய் நோட்டுகளில் உள்ள மை பாதி அழிந்தநிலையில் இருப்பது போன்ற புகைப்படம் தற்போது சமூகவலைதங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அது கள்ள நோட்டாக இருக்கலாம் என்ற செய்தியும் பரவி வருகிறது. இது குறித்து ரிசர்வ் வாங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அப்போது, கடந்த பத்து மாதங்களாக மோடியுடன் புதிய நோட்டு அறிவிப்பு விஷயத்தில் ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொண்ட அடையாளம் தெரியாத அதிகாரி சொன்னது: மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். நாடுமுழுவதும் ஏற்பட்டு உள்ள சில்லறை தட்டுப்பாட்டை போக்க நமது பிரதமர் மோடியின் ரகசிய திட்டத்தில் இதுவும் ஒன்று. இது பாதியாக அச்சான 500 ருபாய் நோட்டு அல்ல, அதில் பாதி மதிப்பு கொண்ட 250 ருபாய் நோட்டு. சாயம் போனால்தான் 2000 ரூபாய் நோட்டு ஒரிஜினல் என்ற தகவல், ஏற்கனவே பொது மக்களுக்கு பெரிதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.பி.ஐ. தரப்பில் இந்த கேள்வியை கேட்டதற்கும் மழுப்பலான பதிலையே அவர்கள் தெரிவித்துள்ளனர். புதிய நோட்டுகளை ஈரமாக்கப்பட்ட பஞ்சு கொண்டு தேய்த்தால் லேசாக சாயம் ஒட்டும், அப்படியே மதிப்பும் பாதியாக குறைந்து சில்லறை கிடைத்து விடும். தமிழ் பட இயக்குனர் தங்கர் பச்சான் 9 ருபாய் நோட்டு என்று நாவல் எழுதலாம், படம் எடுக்கலாம், பாரத பிரதமர் 250 ருபாய் நோட்டு வெளியிட கூடாதா என்று எரிந்து விழுந்தார் அந்த அதிகாரி.
There are no comments yet
Or use one of these social networks