சென்னை: இன்று சனிக்கிழமை மாலையில் ஜெயலலிதா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருப்பதாக அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான சி.ஆர். சரஸ்வதியும் செய்தியாளர்களிடம் இதை உறுதிசெய்தார். அப்போலோ மருத்துவமனையின் வாசலில் செய்தியாளர்களிடம் பேசிய சி.ஆர். சரஸ்வதி, “இன்று மாலையில் முதலமைச்சர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். விரைவில் அவர் பூரண குணம் பெற்று வீடு திரும்புவார்” என்று கூறினார்.

முதலமைச்சர் ஜெயலலிதா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து மாற்றப்பட்டது குறித்து அப்போலோ மருத்துவமனை அதிகாரபூர்வமாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி, முதலமைச்சர் முழுமையாக குணமடைந்து விட்டதாகவும் நோய்த் தொற்று ஏற்படுவதைத் தடுப்பதற்காகவே அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் கூறியிருந்தார். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவின் காரணமாக ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.jayalalitha-21

இது குறித்து மேலும் விபரமறிய மதிமுக தலைவர் வைகோவை நமது கப்ஸா நிருபர் சந்தித்த போது வழக்கத்திற்கு மாறாக தனது அமைதியான முகத்தில் கோபம் காட்டி பேசினார்: என்னுடைய கடவுள் புரட்சி தலைவி அம்மா அவர்களை ஸ்பெஷல் வார்டில் இருந்து ‘சாதாரண’ வார்டுக்கு மாற்ற அப்பல்லோவுக்கு யார் தைரியம் கொடுத்தது. இது அந்த கருணாநிதியின் சதியாகத்தான் இருக்கும். விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்குத்தான் என்பார்கள், அதை பின்பற்றி என் தலைவிக்கு தந்த ஐசியூ உபசரிப்பை திடீரெனெ நிறுத்தி சாதாரண வார்டுக்கு அனுப்பிய அப்பல்லோ நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறேன். அம்மா மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் இந்த விஷயத்தை அம்மாவின் கவனத்திற்கு கொண்டு சென்று அப்பல்லோவுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்று கோபமாக சொன்னார்.

பகிர்

There are no comments yet