சென்னை: திருப்பூரில் உள்ள உறவினர் பெண்ணை சந்திக்க தாடியுடன் வந்த வேந்தர் மூவீஸ் மதனை போலீஸார் இன்று கைது செய்தனர். அவரை திருப்பூரிலிருந்து சென்னைக்கு போலீஸார் அழைத்து வந்தனர். எஸ்.ஆர்.எம் உள்ளிட்ட பல மருத்துவ கல்லூரிகளுக்கு மாணவர்களை சேர்த்து விடும் ஏஜெண்டாக செயல்பட்டு வந்தார் மதன். பலகோடி பணம் புழங்கவே திரைப்பட நிறுவனத்தை தொடங்கினார். மாணவர்களிடம் சீட் பெற்று தருவதாக வசூலித்த பணமும் சினிமாவில் கரைந்து போனது. எஸ்.ஆர்.எம். மற்றும் பிற கல்லூரிகளில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி ஏராளமான பெற்றோர்களிடம் பல கோடி ரூபாய் மதன் சுருட்டியுள்ளார் என்று புகார்கள் கிளம்பின.

இந்நிலையில் ‘வேந்தர் மூவிஸ்’ மதன், காசிக்கு சென்று கங்கையில் சமாதியடைகிறேன் என்று கடந்த மே மாதம் 27-ம் தேதி கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமானார். மதனுக்கு உடந்தையாக இருந்து செயல்பட்டதாக ஐ.ஜே.கே கட்சியின் மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் பார்கவன் பச்சமுத்து, மதுரை மாவட்ட தலைவர் சண்முகம், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் பாபு மற்றும் புரோக்கர் விஜய்பாண்டி, மதன் அலுவலகத்தில் மேலாளராக இருந்த சுதீர், அக்கவுன்டன்ட் குணா, மற்றும் எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 மாதங்களாக தேடப்பட்ட வந்த மதனை போலீஸார் இன்று திருப்பூரில் கைது செய்துள்ளனர். வடமாநிலங்களில் சுற்றித் திரிந்த மதன், தமிழகத்துக்கு வந்த போது போலீஸிடம் சிக்கிக் கொண்டார். தலைமறைவாக இருந்த காலக்கட்டத்தில் மதன், உத்தரகாண்ட் மாநிலத்தில் இரண்டு பண்ணை வீடுகள் வாங்கிய தகவல் கிடைத்துள்ளது. மதனை கைது செய்ய ‘ஆபரேசன் எம்’ வகுக்கப்பட்டது.parivendhar6001

மதன் பிடிப்பட்ட தகவலை நமது கப்ஸா நிருபரிடம் பகிர்ந்த சிரிப்பு போலீஸ் உயரதிகாரி கூறியதாவது: மணிப்பூரில் கடந்த ஒரு மாதமாக மதனை தேடி வந்த சமயத்தில் திருப்பூரில் அவர் வரும் தகவல் எங்களுக்கு கிடைத்தது. போலீஸ் டிபார்ட்மெண்டில் எங்களுக்கு பயணப்படி பஞ்சபடி கொடுக்காததால் திருப்பூர் வரும் வரை காத்திருந்தோம். திருப்பூரில் அவரது மனைவியின் உறவுக்கார பெண் வீட்டில் பதுங்கு குழியில் இருந்த அவரை கைது செய்தோம். இத்தனை நாட்கள் எங்கு தலைமறைவாக இருந்தீர்கள் என்று போலீஸ் உயரதிகாரி கேள்வி கேட்டார். அதற்கு சிரித்துக் கொண்டே, ‘எனக்காக இந்தவுலகத்தில் இடமில்லை. எனக்கு உதவி செய்ய ஆயிரம் பேர் இருக்கிறார்கள். சமீபத்தில் சென்னைக்கு கூட ஒரு முறை வந்து சென்றேன்’ என்று சொன்னதும் அதிர்ச்சி அடைந்தோம். மீண்டும் சிரித்த மதன் என்னை போன்ற பண முதலைகளுக்காக மோடியிடம் கூறி 2000 நோட்டு அடிக்க சொன்னதே நான் தான் என்று கூறினார். ஆபரேஷன் எம் என்றால் ‘மோடி’ அல்லது ‘மணி’ என்று அர்த்தம் . வேந்தர் மூவீஸ் என்ற பெயரிலேயே அது பச்சமுத்து ஐயாவுக்கு நான் பினாமி என்பது வெட்ட வெளிச்சமாகிறது, அப்புறம் அப்பன் குதிருக்கு உள்ள இல்ல என்பது வெத்து பேச்சு.. பிடிப்பட்டபோது மதனிடம் பழைய 1000 500 நோட்டுகளாக இருந்ததால் பேரம் படியாமல் வேறு வழியில்லாமல் அவரை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டியதாகி விட்டது” என்று கண்ணீர் மல்க கூறினார்

பகிர்

There are no comments yet