சென்னை: இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியாவதற்கு சில நாட்கள் முன்பு ரஜினிகாந்தின் மருமகனும் நடிகருமான தனுஷ் மொத்தமாக 40 கோடி கடனை அடைத்துள்ளார். அறிவிப்பு வரும் சில தினங்களுக்கு முன்பு அவசரம் அவசரமாக சுமார் 40 கோடி ரூபாயை சில கார்களில் ஏற்றிக் கொண்டு மாவட்டம் தாண்டி கொண்டு போய் கொடுத்துவிட்டு வந்தாராம். அந்த பைனான்ஸ் பிரமுகரிடம். “நமக்கும் உங்களுக்கும் எந்த கடன் பஞ்சாயத்தும் இனி இல்ல. இனிமே வாங்குனாதான் உண்டு ” என்று ஒரேயடியாக முடித்துவிட்டு வந்தவருக்குதான் மூன்று நாள் கழித்து இந்த கருப்பு பண செய்தி. இவர் கடனை அடைத்துவிட்டு வந்தாரல்லவா? கொடுத்த கடனை திருப்பி வாங்கிய அந்த பைனான்சியருக்கு 500 கோடியாவது அடிபடும் என்கிறார்கள்.

 கடந்த நவம்பர் 8 ஆம் தேதி இரவு பிரதமர் மோடி அளித்த தொலைக்காட்சி பேட்டியில் 1000 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று தடாலடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதுமுதல் இன்றளவும் தங்களிடம் உள்ள சில ஆயிரம் ருபாய் நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் வாங்கி வாசலில் தவம் கிடக்கிறார்கள். வாங்கி ஊழியர்கள் வீட்டுக்கும் போகாமல் ரோட்டுக்கும் போக முடியாமல் அலுவலகமே கதி என்று கிடக்கிறார்கள். இந்நிலையில் மோடி அறிவிப்பு வெளியிட்ட சில மணி நேரங்களில் காவிரி பிரச்சனை, கர்நாடக கலவர பிரச்சினை ஆகியவற்றின் போது மௌன விரதம் இருந்த ரஜினி வரிந்து கட்டி கொண்டு “மோடியின் அறிவிப்பால் புதிய இந்தியா பிறந்துள்ளது” என்று பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது. அப்போதே, ரஜினிக்கு நோட்டு விஷயம் முன்பே தெரியுமோ என்ற சந்தேகம் எழுந்தது. இந்த அறிவிப்பால் தற்போது இந்தியா முழுவதும் ஒரு பொருளாதார அவசர நிலை ஏற்பட்டுள்ளதுrajini modi

இதுகுறித்து போயஸ் கார்டன் அருகில் உள்ள வாங்கியில் நோட்டு மாற்ற காத்திருந்த நமது கப்ஸா நிருபர், கருப்பு பணம் பத்துக்குவோர் ஐடியாவை பின்பற்றி வரிசையில் தனக்கு பதிலாக பினாமி ஒருவரை நிறுத்தி விட்டு ரஜினி வீட்டுக்கு சென்ற போது தவ நிஷ்டையை கலைத்து விட்டு வந்த ரஜினி கூறியதாவது: அப்பாவி ரசிகனை கடந்த 40 ஆண்டு காலமாக ஏமாற்றி சேர்த்த சொத்து எங்கே அனாமத்தாக பொய் விடுமோ என்று பயந்து ஒவ்வொரு நாளையும் கழித்து கொண்டிருந்தேன். நல்ல வேளை நான் வணங்குவதாக சொல்லப்படும் மோடிஜி மன்னிக்கணும் ‘பாபாஜி’ நோட்டு அறிவிப்பு வருவதற்கு சில நாட்கள் முன்பாக எனது ஞான திருஷ்டியில் தோன்றி விஷயத்தை கூறிவிட்டார். அதனால் கர்நாடகாவில் கடைசி காலத்தை கழிக்க பண்ணை வீடு வாங்கிய பணத்தில் மீதமிருந்த பணத்தையும் ஷங்கரின் 2.0 படத்திற்கு வாங்கிய ஷூட்டிங் பேட்டாவையும் என் மருமகன் தங்கமகன் தனுஷிடம் கொடுத்து சினிமா குல வழக்கப்படி கொடுக்கவே வேண்டாம் என்றிருந்த 40 கோடி கடனை போனால் போகிறதென்று பழைய நோட்டுகளாக செட்டில் செய் என்று உத்திரவிட்டேன். அனால் இந்த ரூபாய் நோட்டு செல்லாது என்ற விஷயத்தை முன்பே எனக்கு யாரும் சொல்லவில்லை. இதை நீங்களும் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று நமக்கு அன்புக் கட்டளையிட்டு மீண்டும் நிஷ்டையில் ஆழ்ந்தார்.

There are no comments yet