சென்னை: தேர்தல் நடந்த, மூன்று சட்டசபை தொகுதிக ளிலும், ஆளும் கட்சியான அ.தி.மு.க., வேட் பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். எதிர்க் கட்சியான தி.மு.க., இரண்டாமிடம் பெற்றது. இக்கட்சியை தவிர, பிற கட்சிகள் அனைத்தும், ‘டிபாசிட்’ இழந்தன. இந்த தேர்தலில், தே.மு.தி.க., வை பின்னுக்கு தள்ளி, பா.ஜ., மூன்றாமிடத் துக்கு வந்துள்ளது.

தேர்தல் முடிவுகள் குறித்து, ஸ்டாலின், நேற்று சென்னையில் நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தேர்தல் குறித்து கவலைப் படாமல் தந்தை கலைஞர் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். என் தங்கை கனிமொழி பிரச்சாரத்திற்கு வரவில்லை என்னால் எனது அண்ணன் அழகிரி கோபித்துக்கொண்டு போய் விட்டார். குடும்பத்தில் குழப்பம் நீடிக்கிறது.stalin-confused

கடந்த, 2009ல், தி.மு.க., ஆட்சியில் நடந்த திருமங்கலம் இடைத்தேர்தல், ஒட்டுமொத்த இந்தியாவும், தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்தது. ‘திருமங்கலம் பார்முலா’ என்ற தனி ஸ்டைலே உருவானது. இதற்க்கு காரணம் அண்ணன் அழகிரிதான். அவரை பகைத்துக் கொண்டதால் ‘திருமங்கலம் பார்முலா’ வை திருப்பரங்குன்றதில் அமுல் படுத்த முடியவில்லை. அடுத்த ஜென்மத்தில் அண்ணனை சந்தித்து ரகசிய ‘திருமங்கலம் பார்முலா’வை அறிந்து தேர்தலில் வெற்றிபெற முயல்வேன் என்று கண்ணீரோடு கூறினார்.

There are no comments yet