சென்னை: பல திரைப்படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்து வரும் துணை நடிகர் எம் ராஜேந்திரன் நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர். நடிகர் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு 27 நவம்பர் 2016 அன்று நடைபெற உள்ளதாக இவருக்கு தகவல் வந்துள்ளது. 2ஆம் தேதி எழுதப்பட்ட அந்த கடிதம் இவருக்கு 9ஆம் தேதி கூரியர் மூலம் வந்துள்ளது. சங்க விதியின்படி, ஆண்டு பொதுக்குழு கூடுவதற்கு 21 நாட்கள் முன்பு அனைவருக்கும் கடிதம் அனுப்பபட வேண்டும். இந்த விதி மீறப்படுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், மார்ச் மாத பொதுகுழு நடத்தி முடித்து ஓரண்டு முடிவதற்குள் மீண்டும் பொதுகுழு கூட்ட தடை விதிக்குமாறு சென்னை 11–வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து கோபத்தில் இருந்த விஷலை ‘கத்தி சண்டை’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் இருந்தபோது சந்தித்த நமது கப்ஸா நிருபரிடம் ‘கத்தி கத்தி கொடுத்த பேட்டி: ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் “பஜ்ஜி போண்டா திங்கிறதுக்கு எதுக்கு தயாரிப்பாளர் சங்கம்” என்று நக்கல் பேச்சு பேசியதால் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்கபட்டு நானே நொந்து போயிருக்கிறேன். பழைய 500, 1000 நோட்டுகளை மாற்ற முடியாமல் தவித்து கொண்டிருந்தேன், அந்த பரபரப்பில் பபொதுக்குழு விஷயம் மறந்து போய்விட்டது. மறுபடியும் பொதுக்குழுவை கூட்டி 100 50 நோடுகளை கலெக்ஷனாக அள்ளி காருக்கு பெட்ரோல் போடும் ஐடியாவில் இருந்தேன். அதற்குள் இந்த ராஜேந்திரன் என் ஐடியாவில் மண்ணைப் போடுவார் என்றும் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. லயோலா கல்லூரியில் இடம் போதாது என்று கேஸ் போட்டிருக்கிறார்கள், அங்குதான் உண்டியல் குலுக்க மாணவர்கள் சுலபாமாக கிடைப்பார்கள். ஸ்டார் கிரிக்கெட்டில் அடித்தது எங்கள் ‘பார்’ செலவுக்கே சரியாகப் போய் விட்டது. ரஜேந்திரன் பின்னணியில் என் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவி கனவு, தமிழகத்தின் வருங்கால முதல்வர் பதவி கனவு இரண்டையும் தவிடு பொடியாக்க நினைக்கும் தீய சக்திகள் வேலை செய்வது மட்டும் தெரிகிறது. ஸ்டண்ட் யூனியனில் எனக்கு தெரிந்த ஆட்களை அனுப்பி விசாரித்ததில், சென்ற பொதுக் குழுவில் போட்ட உப்புமா ராஜேந்திரக்கு கிடைக்கமல் போனதும் ஒரு காரணம் என்று தெரிந்து கொண்டேன். லெக் பீசுடன் பீனிக்ஸ் பிரியாணி வாங்கி கொடுத்து அவரை சமாதானப் படுத்த ஷூட்டிங்கில் சமைத்துப் போடும் ப்ரொடக்ஷன் ஆட்களை குவாட்டர் வாங்கிக் கொடுத்து அனுப்பியுள்ளேன்.” என்றார்.
There are no comments yet
Or use one of these social networks