சென்னை: அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளிலும், கடந்த சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக 4-வது இடத்தையே பிடித்துள்ளது. இந்த மூன்று தொகுதிகளிலும் பாரதீய ஜனதாக் கட்சி 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. “NOTA” எனப்படும் யாரையும் தேர்வு செய்ய விரும்பவில்லை என்ற பிரிவுக்கு கிடைத்த வாக்குகளையும் எடுத்துக் கொண்டால், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் ஐந்தாவது இடத்தையே தேமுதிக பிடித்துள்ளது.

இந்த தேர்தல் முடிவுகளால் எப்போதும் போல் கலகலப்பாக இருக்கும் கேப்டனை சோக காட்சியில் கிளிசரின் இல்லாமலேயே கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த கேப்டனை நமது கப்ஸா நிருபர் சந்தித்தபோது அவர் கூறியதாவது: ஆளும் கட்சியாக இருப்பவர்கள் வெற்றி பெறுவதும், எதிர்கட்சியாக இருப்பவர்கள் தோல்வி பெறுவதும், என்னை போல் இரண்டும் கெட்டான் கட்சியினர் டெபாசிட் இழப்பதும் வரலாற்றில் புதிதல்ல. தேமுதிகவுக்கு கிடைத்த அத்தனை வாக்குகளும் யாரோ பட்டனை தெரியாமல் அழுத்தியதால் கிடைத்தவை. stalin sadஎலக்ஷன் என்றாலே கலக் ஷன் என்று ஆகிவிட்ட சூழ்நிலையில், எனக்கு கொடுக்க இப்போது யாருமில்லை. இருந்த கட்சியினரும் திமுகவிற்கு ஓடி விட்டனர். மாற்றம் ஒன்றுதான் என்றும் மாறாதது. சாதாரண நடிகனாக ஹீரோயின்களை கொஞ்சிக்கொண்டு, வில்லன்களை அடித்து துவம்சம் செய்த நான், கட்சி ஆரம்பித்தேன், எதிர்க்கட்சி தலைவராகவும் ஆனேன். பாழாய் போன வைகோ பேச்சை கேட்டு கடந்த தேர்தலில் டெபாசிட் இழந்தேன். இப்போது மானம் இழந்து நிற்கிறேன். இந்த மாற்றம் ஒன்றே போதும் எனக்கு.

என்னுடைய கட்சியினரை வளைத்து போட்டுகொண்டு, என்னுடைய வாக்கு வங்கியையும் திருடிய திமுக பொருளாளர் ஸ்டாலினை சும்மா விட மாட்டேன், அவரின் மீது திருட்டு வழக்கு சுமத்தி நடவடிக்கை எடுக்க கமிஷனரிடம் புகார் கொடுப்பேன் என்று கூறி மேலும் இரண்டு பெக்கை உள்ளே விட்டு தனது ட்ரேட் மார்க் சிவப்பு விழிகளை உருட்டி முறைத்தார்.

பகிர்

There are no comments yet