கண்டைனர் பணம் என்ன ஆச்சு…ராஜ்யசபா அதிமுக எம்.பி.க்களிடம் “நலம்” விசாரித்த மோடி

1796

புது டெல்லி/சென்னை: முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைபாடு காரணமாக, சென்னை அப்பல்லோவில் கடந்த 2 மாத காலமாக சிகிச்சை எடுத்து வருகிறார். அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உட்பட, அவரது உடல் நலம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தனர். ஜெ.வின் உடல் நலம் குறித்து விசாரிக்க பிரதமர் மோடி சென்னை அப்பல்லோவிற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை.

இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற பாராளுமன்ற அவைக் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டார். மதிய உணவு இடைவேளையில், அவர் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் மற்றும் மற்ற சில அதிமுக எம்.பி.க்களிடம் கண்டைனர்கள் குறித்து விசாரித்ததாக நம்பத்தகாத செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 500, 1000 ரூபாய் தடையால் முதல்வருக்கும், அவரது அமைச்சரவை சகாக்களும் ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கும், சிரமத்திற்கும் மோடி வருத்தம் தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது. “ஜெயலலிதா போர்க்குணம் கொண்டவர். எனவே இதெல்லாம் சாதாரணம் என அவர் அதிமுக எம்.பி.க்களிடம் கூறினார் என்று டெல்லியில் இருந்து வரும் செய்திகளை தெரிவிக்கின்றன.

There are no comments yet