சென்னை: எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலினுக்கு சிறப்பு தனி உதவியாளராக பணியாற்றிய ஆதிசேஷனை இடமாற்றம் செய்து பேரவைச்செயலாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆகஸ்ட் 22 தேதி முதல் அப்பொறுப்பில் இருந்து ஆதிசேஷன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மு க ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். சட்டப்பேரவை பணியாளர் விதிகளுக்கு முரணாக அவருக்கு மேலே உள்ளவாரான மு க ஸ்டாலினின் ஒப்புதல் இல்லாமல் இடமாற்றம் செய்து வெளியிட்ட இந்த இடமாற்ற அரசாணையை நிராகரித்த நீதி மன்றம், மீண்டும் சிறப்பு தனி உதவியாளராக நியமிக்க வேண்டும் என்று நீதி மன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.STALIN

இது குறித்து ஸ்டாலினை சந்திக்க அவர் வீட்டுக்கு சென்ற உங்கள் நியூஸ் கப்ஸா நிருபர், அங்கு பட்டா பட்டி ட்ரவுசர் தெரிய மூட்டு வலி தைலம் தேய்த்துக் கொண்டு இருந்த ஸ்டாலினை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது ஸ்டாலின் கூறியதாவது: “இளைஞர் அணித்தலைவரான எனக்கு கொஞ்ச நாளாக மூட்டு வலி இருந்து வந்தது. வீட்டில் உள்ள சில 500, 1000 நோட்டுகளை மாற்ற முதியோர்களுக்கான நோட்டு மாற்றல் நாள் அன்று சென்று கியூவில் நின்றதால் வலி அதிகமாகி விட்டது. எனக்கு சிற்ப்பு தனி உதவியாளராக பணியாற்றிய ஆதிசேஷனை திடீரென வி.ஆர்.எஸ் கொடுத்து அனுப்பப் பார்த்தார்கள், நான் வழக்கு தொடர்ந்ததால், இப்போது அவரை விடுவித்துள்ளார்கள். இப்போது இருக்கும் உதவியாளர் அல்சேஷன் மாதிரி எப்போதும் குரைக்கிறார், அதனால் தான் ஆதிசேஷனை திரும்ப கேட்டு வாங்கினேன். ஆதிசேஷன் எனக்கு போட்டி சட்டசபை நடத்த, நிஜ சட்டசபை வெளிநடப்பு செய்ய என்று பல வழிகளின் உதவி புரிந்தார். என்னிடம் மீதமுள்ள பழைய நோட்டுகளை மாற்ற கியூவில் நிற்க அவரை அனுப்பலாம் என்றிருக்கிறேன்.” ‘ஜெயாவுக்கு ஒரு ஓ.பி.எஸ் போல ஸ்டாலினுக்கு இந்த ஆதிசேஷ்’ என்று பன்ச் வைத்துவிட்டு வெந்நீரில் பஞ்சை நனைத்து மூட்டுகளில் ஒத்தடம் கொடுத்தபடி திமுக போல செல்லாமல் போன பழைய நோட்டுகளை கவலையுடன் எண்ணிகொண்டிருந்தார்.

பகிர்

There are no comments yet