புது டெல்லி: மோடியின் ‘செல்லாது’ அறிவிப்பு மூலம் திட்டமிட்ட கொள்ளைகு மத்திய அரசு வழிவகுப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவையில் கடுமையாக பேசினார். “கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி 500 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்ததன் மூலம் ஏழை மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். தவறான இந்த நடவடிக்கையால் நமது ரூபாய் மற்றும் வங்கிகளின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டார்கள். விவசாயம் மற்றும் சிறு தொழில்கள் முடங்கி உள்ளது. ரிசர்வ் வங்கியின் மோசமான நிர்வாகத்தின் பிரதிபலிப்பே இது. இந்த நடவடிக்கையால் நாட்டில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இது நீடித்தால் நாம் அனைவரும் இறந்துவிடுவோம்.” இவ்வறு கடுமையான வார்த்தை பிரயோகத்தால் ஆளும்கட்சியை மன்மோகன் கண்டித்தார்.
பார்லிமென்டை விட்டு வெளியில் வந்ததும் வாயில் மீண்டும் பிளாஸ்திரி ஒட்டிக்கொண்டு செய்தியாளர்களிடம் சை’கை’ யில் பேசிய அவர் கூறியதாவது.. காங்கிரஸ் தலைவர்கள் பதுக்கிய 12 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மோடி ஒரே நாளில் வெற்றுக் காகிதங்களாக மாற்றிவிட்டார் மோடி. அந்த கடுப்பில் என்னை மீறி எனக்கு பேச்சு வந்துவிட்டது. இது ஒரு மெடிக்கல் மிரக்கிள். காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் மாதம் ஒரு ஊழல் நடைபெற்றது. 2ஜி, காமன்வெல்த், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, ஆதர்ஷ் குடியிருப்பு ஒதுக்கீடு, ராணுவ விமான ஒப்பந்தங்கள் என அனைத்து துறைகளிலும் ஊழல் நம்பர் ஒன் நாங்கள்தான். அப்போது நான் அமைதி காத்தேன். தற்போது மோடியின் இந்த ‘செல்லாது’ அறிவிப்பால் என்னிடம் மூட்டை மூட்டையாக உள்ள பழைய நோட்டுகளை என்ன செய்வது என்றே தெரியவில்லை.. 4000 ரூபாய் பணத்தை மாற்ற 4 கோடி ரூபாய் காரில் வந்து டிராமா பண்ணி பார்த்தார் ராகுல், அது மக்கள் மத்தியில் எடுபடவில்லை. கடந்த இரண்டு வாரங்களாக சோனியாவும் ராகுலும் என்னை கழுத்தளவு நீரில் நிற்க வைத்து ‘வாய்ஸ் தெரபி’ கொடுத்து மக்களவையில் கடுமையாக பேச வைத்து விட்டனர். டிவியில் இந்த காட்சியை பார்த்த என் குடும்பத்தினர் முதியவனான பிறகாவது பேச்சு வந்தது கண்டு கண் கலங்கினர். மற்றபடி மக்கள் பிரச்சினை குறித்து நான் கூறியதெல்லாம் சும்மாச்சுக்கும்..” என்று சை’கை’ பேட்டியை முடித்துக் கொண்டு டாடா காட்டியபடி கிளம்பினார்.
There are no comments yet
Or use one of these social networks