சென்னை: கவர்னர் முதல் பிரதமர் வரை யாரும் நுழைய முடியாத இரும்புக் கோட்டையான அப்பல்லோ மருத்துவமனையில் மாதக் கணக்கில் சிகிச்சை பெற்று வரும் அம்மா உடல்நலம் குறித்து விபரமறிய முடியாமல் கடைக்கோடி தொண்டன் வரை அவதிப்பட்டு வரும் வேளையில், அவ்வப்போது மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பிரதாப் சி ரெட்டி ஆறுதல் வார்த்தைகள் கூறி வருவது அனைவரும் அறிந்ததே. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ட்ராக்கியோஸ்டமி’ செய்யப்பட்டவர்கள் பொதுவாகப் பேச முடியாது. ஆனால் ஜெயலலிதாவுக்கு சிறிய ஸ்பீக்கர் பொருத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும் பேசுவது எளிதல்ல, மூச்சைப் பிடித்துக் கொண்டு பேச வேண்டும், சில நொடிகளோ, நிமிடங்களோ அப்படி பேசலாம். முதல்வருக்கு தற்போது பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் எழுந்து நடக்க வேண்டியது தான் பாக்கி” என்றார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, அப்பலோ மருத்துவமனை மருத்துவ செய்திக் குறிப்புகளை வெளியிட்டது. ஆனால், தற்போது அந்த மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி, பொது நிகழ்வுகளில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும்போது இது தொடர்பான தகவல்களைக் கூறிவருகிறார்.vijayakanth image

இது குறித்து கேப்டன் விஜயகாந்த கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளிக்காத பேட்டியில் கூறியதாவது: நானும் என் மனைவி பிரேமலதாவும், அம்மையார் ஜெயலலிதாவை பார்க்க அப்பல்லோவுக்கு போகவில்லை, இனிமேல் போகப்போவதுமில்லை. அம்மா வீட்டிற்கு வந்த பிறகு அவர் அனுமதித்தால் போயெஸ் தோட்டத்திற்கு சென்று சந்திக்கலாம் என்று பிரேமலதா கூறிவிட்டார். எனக்கு ஒரு சந்தேகம், கவர்னரே நுழைய முடியாத அப்பல்லோ ஜெயா வார்டில் சட்டப் பேரவை சபாநாயகர் அதாவது ‘ஸ்பீக்கர்’ நுழைந்தது எப்படி சாத்தியம்? சரி ஸ்பீக்கர் என்றால் ‘ஒலிபெருக்கி’ என்று வைத்துக் கொண்டாலும், வழிபாட்டுத் தலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி வைப்பதால் அதிக ஒலி மாசு ஏற்படுவதாக தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மொடக்குறிச்சி, குமாரபாளையம் ஆகி இடங்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அம்மா அட்மிட் ஆன நாள் முதல் பூஜை புனஸ்காரம், பூசணி, தேங்காய் உடைப்பு அலகு குத்துதல், காவடி தூக்குதல், தொழுகை, பைபிள் வாசிப்புன் என்று சர்வ மத வழிபாட்டு தலமாக மாறிய அப்பல்லோவில் ஒலி பெருக்கி வைப்பதும் குற்றம் தானே? இது குறித்து நீதி மன்றம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஜெயா அவர்கள் நேரில் தொன்றி தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.” என்று நாக்கை கடித்தார்.

பகிர்

There are no comments yet