புது டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றம் தொடர்ந்து 7-வது நாளாக முடங்கியது. இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டதால் முக்கிய அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டன.
ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெற்ற விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்கக் கோரியும், வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தக் கோரியும் எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பிரச்சினை எழுப்பி வருகின்றனர். இதனால் கடந்த 6 நாட்களாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கியுள்ளது. இந்த சூழலில் டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘‘முன்கூட்டியே தயாராவதற்கு அவகாசம் அளிக் காத காரணத்தினால் தான், எதிர்க்கட்சியினர் என்னை கடுமை யாக விமர்சித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் கறுப்புப் பணத்துக்கு ஆதரவானவர்கள்’’ என தெரிவித்தார்.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, ‘‘எதிர்க்கட்சியினர் கறுப்புப் பணம் வைத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தவறாக குற்றம்சாட்டியுள்ளார். இதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்’’ என்றார். எதிர்க்கட்சித் தலைவரான குலாம் நபி ஆசாத், ‘‘ரூபாய் நோட்டுகள் வாபஸ் தொடர்பாக நேற்று (நேற்று முன்தினம்) நடந்த விவாதத்தின்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் கறுப்புப் பணத்துக்கு எதிராக இருப்பதாக தெளிவாக விளக்கினர். அவ்வாறு இருந்தும் பிரதமர் நரேந்திர மோடி எப்படி இத்தகைய குற்றச்சாட்டை முன்வைக்கலாம். இதற்கு அவர் நிச்சயம் மன்னிப்பு கோரியே ஆக வேண்டும்’’ என்றார். ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ்வும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும் வேண்டும் என வலி யுறுத்தினார். இதே போல் சமாஜ் வாதி, திரிணமூல் காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளைத் சேர்ந்த எம்பிக்களும் பிரதமர் மோடி மன்னிப்பு கோர வலி யுறுத்தி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து நண்பகலுக்குள் இருமுறை அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த குழப்பம் குறித்து சென்னையில் இருந்து நமது கப்ஸா நிருபர் பிரதமர் மோடியை வாட்சப் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டபோது மோடி கூறியதாவது: இந்த ரூபாய் செல்லாது என்ற விஷயத்தை நான் அம்பானி, அதானி மற்றும் நெருக்கமான பாலிவுட் ஸ்டார்களுக்கு மட்டும் தான் சொன்னேன். வேறு யாருக்கும் தெரியாது. இதனால் எதிர்கட்சிளின் ஊழல் பணம் முடக்கப்பட்டுவிட்டது. மாயாவதி உத்திரபிரதேசத்தின் ஜெயலலிதா, முலாயம் சிங் உத்திரபிரதேசத்தின் கருணாநிதி இவர்களின் செய்த ஊழல்கள் நாடறியும். எனக்கு நெருக்கமான அம்பானி, ரஜினி காந்த் போன்றோர் அமைதியாக இருக்கும்போது இவர்கள் மன்னிப்புகோருவதில் அர்த்தம் இல்லை. எதிர்கட்சிகளிடம் இப்போது செலவுக்கு கூட பணம் இல்லாமல் செய்து விட்டேன். அவர்கள் பழைய செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு, செல்லாக்காசு எதிர்கட்சிகள் ஆகி விட்டனர். வேன்றுமென்றால் எனது ஜியோ நண்பர் அம்பானி கேட்டுக்கொண்டால் மட்டுமே மன்னிப்பு கேட்பேன், இல்லாவிட்டால் மன்னிப்பு என்ற வார்த்தையே என் அகராதியில் இல்லை என்று கூறி தொடர்பை துண்டித்தார்.
There are no comments yet
Or use one of these social networks