சென்னை: மதுரை அருகில் உள்ள மேலூர் மலம்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற பஸ் கண்டக்டர் கதிரவன், அவர் மனைவி மீனாட்சி இருவரும் மேலூர் ஜுடிசியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ‘பிரபல நடிகராக உள்ள தனுஷ் நவம்பர் 7, 1985 அன்று தங்களுக்கு மூத்த மகனாக பிறந்ததாகவும், கலைச்செல்வன் என்று பெயரிட்டு வளர்த்ததாகவும் கூறி உள்ளனர். மேலும் பிளஸ் 1 படிப்பை பாதியிலேயே நிறுத்தி கஸ்தூரி ராஜாவிடம் பணி புரிந்தத கலைச்செல்வன் பின்னர் திரைப்படங்களில் நடித்து தனுஷ் என்று பெயர் மாற்றி பிரபல நடிகர் ஆனார்’ என்றும் கூறி உள்ளனர். கஸ்தூரி ராஜா கலைச்செல்வன் என்ற தனுஷை பார்க்க விடாமல் தடுத்ததாகவும், சாப்பாட்டு செலவு, வாடகை செலவு என்று மொத்தம் 65 ஆயிரம் மாதம் தோறும் தேவைப்படுவதாகவும், ஜீவனாம்சம் தர வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.
கலைச்செல்வன் என்று ஒரிஜினல் பெற்றோர் வைத்த பெயருக்கு ஏற்றவாறு கலையை கொலை செய்து செல்வத்தை சேர்த்துக்கொண்டிருக்கும் மன்மத ராசா தனுஷை சந்திக்க மாமனார் ரஜினி மூலம் சிபாரிசு வாங்கி நமது கப்ஸா நிருபர் தனுஷை சந்தித்த போது அவர் கூறியதாவது: எனது தற்போதைய அப்பா, மாமனார் ரஜினி தான். அந்த அடையாளத்தால் தான் நான் அறியப்படுகிறேன். திருமணத்திற்கு முன் என் அப்பா கஸ்தூரி ராஜா. எங்கள் வீட்டில் நாங்கள் நாங்கு பிள்ளைகள் அக்காக்கள் விமலகீதா, கார்த்திகா தேவி, மற்றும் என் அண்ணன் செல்வரகவன் திரைபட இயக்குனர் என்று கூறிகொண்டு சைக்கோ தனமான படங்கள் எடுத்து தற்போது வாய்ப்பிழ்ந்து இருப்பது தமிழ் நாட்டுக்கே தெரியும். நான் தான் கடைசி பையன். எனது இயற்பெயர் வெங்கடேஷ் பிரபு. சினிமாவுக்காக ‘தனுஷ்’ என்று மாற்றிக் கொண்டேன். ஆரம்ப காலங்களில் இளைஞர்களை கெடுக்கும் “துள்ளுவதோ இளமை” போன்ற பிட்டு படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். பிறகு ‘மன்மத ராசா’ போன்ற தர லோக்கல் பாடல்கள் மூலம் இளைஞர்களை கவர்ந்து, நான் சின்ன வயதிலேய பெரிய நிலைக்கு வந்ததும், (மாமாவின் தலையீட்டால்) தேசிய விருதும் வாங்கியதால் பலருக்கு ‘கொலவெறி’ பிடித்து விட்டது. பழைய விஷயங்களை கிளறி விடுகிறார்கள், இந்த நிலையில் மதுரையில் இருந்து முதிய தம்பதியினர் என் பெயர் கலையரசன் என்றும், நான் அவர்களது மூத்த ‘தங்கமகன்’, பிளஸ் 1 படிக்கும் போது நான் உதவி இயக்குனராக கஸ்தூரி ராஜாவிடம் சேர்ந்து நடிகரானதாக வழக்கு போட்டிருக்கிறார்கள். இந்த கதை சுவாரசியமானதாக் இருக்கிறது, வெற்றிமாறனுடன் இணைந்து ஒரு நேஷனல் அவார்டு படமே எடுக்கலாம்.
இருந்தாலும் எனக்கு அடுத்த படத்திற்கான கதை கொடுத்து உதவி செய்ததற்காக, ஏற்கனவே ‘செல்லாது’ அறிவிப்புக்கு முன்பே என் மாமா ரஜினி அறிவுரையின்படி 40 கோடி கடனை அடைத்தது போக மீதமுள்ள சில பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளில் மதுரையை சேர்ந்த பழைய பெற்றோருக்கு ஜீவனாம்சம் தரலாம் என்று இருக்கிறேன். அப்படியே இந்த கதைக்கு தமிழ் தெலுங்கு மலையாள கன்னட ரைட்ஸ் வாங்கிவிடலாம் என்று இருக்கிறேன்” என்றார்.
There are no comments yet
Or use one of these social networks