போட்டோ தாங்க்ஸ் : தி ஹிந்து

சென்னை: சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு விட்டாலும், அவை இன்னும் பொதுமக்கள் போக்குவரத்துக்கு திறந்து விடப்படவில்லை. அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் முதல்–அமைச்சர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியவுடன் அவரது கைகளால் தான் இந்த மேம்பாலங்களை திறக்க வேண்டும் என்பதற்காகத் தான் இரு பாலங்களையும் தமிழக ஆட்சியாளர்கள் அடைத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திறக்கப்படாமலே சும்மா இருக்கும் பாலங்கள் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், நாங்களே பாலங்களை திறந்து அவற்றை இடிப்போம் என்று கூறியிருந்தார். இது குறித்து மேலும் விபரமறிய நமது கப்ஸா நிருபர் கடப்பாரை, கோடாரிகளுடன் தனது பரிவாரங்களுடன் பிஸியாக இருந்த ராமதாஸை சந்தித்தபோது அவர் கூறியதாவது: மாற்றம்-முன்னேற்றம்-‘அன்புமணியாகிய நான்’ என்று பிரசாரம் செய்த என் மகன் போல, மரம் வெட்டி ராமதாஸ் ஆகிய எனக்கும் என் குடும்பத்திற்கும் தேர்தல் தோல்விக்கு பிறகு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. கோடாரியையும், சட்டத்தை கையில் எடுத்து கொண்டு நாங்கள் செய்யாத அட்டகாசமா? மரம் வெட்டி மக்களுக்கு இடையூறு செய்தது, பேருந்துகளை தீ வைத்து எரித்தது போன்ற செயல்கள் எல்லாம் பாமகவின் மக்கள் நலப்பணிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு.ramadass-250-1

வன்னியர் சாதிச் சங்கமாக இருந்தபோது எங்கள் முக்கிய முழக்கம், “தேர்தல் பாதை, திருடர் பாதை” “தேர்தலை புறக்கணியுங்கள்” என்பதுதான். ஆனால் நாங்களே குடும்பமாக தேர்தலில் நிற்கிறோம், எல்லாம் ஒரு பிழைப்புக்காகத்தான். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளான திமுகவையும், அதிமுகவையும் அகற்றுவோம் என்று கூறி எங்கள் சந்ததி பிழைக்க கலைஞர் மாதிரி குடும்ப அரசியல் செய்வோம். முன்பு நாங்கள் தேவையில்லாமல் சும்மா இருந்த மரங்களை வெட்டி பிரபலமானது போல், இழந்த வாக்கு வங்கியை மீட்க இப்போது திறக்கப்படாமல் சும்மா இருக்கும் பாலங்களை இடித்து மாடர்ன் அரசியல் செய்வோம். இதன் மூலம் அன்புமணியை எப்படியாவது முதல்வராக்க முயல்வோம். அந்த இலக்கை நோக்கிய பாமகவின் இது போன்ற தில்லுமுல்லுகள் மற்றும் அராஜக பயணங்கள் தொய்வின்றி, புதிய உத்வேகத்துடன் தொடரும்” என்று கூறி கடப்பாரை பயணத்தை தொடர்ந்தார்.

பகிர்

There are no comments yet