கோவை, :”கறுப்பு பணத்தை ஒழிக்க முற்படும் பிரதமர் மோடியின் திட்டத்துக்கு ம.தி.மு.க., ஆதரவு அளிக்கும்; இந்த பிரச்னையில் அவருக்கு சல்யூட்,” என பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.கோவையில் நிருபர்களிடம் வைகோ கூறியதாவது : தற்போது நாடு முழுவதும் ரூ. 500, ரூ. 1,000 நோட்டுக்களை பிரதமர் மோடி செல்லாது என்று அறிவித்தது குறித்து தான் பேசி வருகின்றனர். மோடி, அறிவிப்பை வெளியிட்டபோதே, அதற்கு ஆதரவு தெரிவித்தேன். துணிச்சலான, வரவேற்கத்தக்க முடிவை மோடி எடுத்துள்ளார்.கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள் கூறும் கருத்துகள் குறித்து நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே, தன் அமைச்சர்களுக்கே தெரியாமல் இந்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார் என்றால் அவரின் திறமையை நாம் உணர வேண்டும்.தற்போது, மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இது தற்காலிகமானது தான், ஆனால், எதிர்காலத்தில் நாட்டிற்கும், மக்களுக்கும் நன்மை தரும்.பிரதமரின் நடவடிக்கையை குறை சொால்லாதீர்கள். அவர் நல்லது தான் செய்துள்ளார். இந்த பிரச்னையில் அவருக்கு ‘சல்யூட்’.இவ்வாறு வைகோ கூறினார்.

வைகோவின் இந்த மாற்றத்தில் ஏதோ விஷயம் இருப்பதாக கப்ஸா நிருபருக்கு ஆந்தை அளித்த தகவல்படி, வைகோவை தனிமையில் சந்தித்தபோது வைகோ கூறியதாவது: மத்திய அரசு கருப்பு பணத்தை ஒழிக்க ரூ.500,ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததையடுத்து நாடுமுழுவதும் பணத் தட்டுப்பாடால் மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். இதனால் மத்திய அரசை கண்டித்து நாளை நாடு முழுவதும் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன. தமிழகத்திலும் இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பிரதான கட்சிகள் அனைத்துமே நாடு தழுவிய இந்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன. மக்கள் நல கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் இந்த கூட்டணியின் முக்கிய தலைவரானநான் இந்த போராட்டத்தை ஆதரிக்கவில்லை.modi-vaiko3

அதற்க்கு காரணம் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்தை பாஜக பிடித்துள்ளது. தமிழகத்தில் அட்ரஸ் இல்லாம இருந்த கட்சி மூன்றாம் இடத்திற்கு எப்படி வரலாம். எனவேதான் மோடிக்கு ஆதரவு தெரிவித்து பாஜகவுடன் வரும் தேர்தலில் கூட்டணி வைத்து இந்தியாவில் இருந்தே பாஜகவை அட்ரஸ் இல்லாமல் செய்து விடலாம் என நம்புகிறேன்.

காவிரி பிரச்சினைக்காக தி.மு.க. ஏற்பாடு செய்த அனைத்து கட்சி கூட்டத்தை நான் புறக்கணித்தேன், ஆனால் திருமாவளவன் வெளிப்படையாகவே ஆதரித்தார். ஆனால் கூட்டணி காரணமாக கலந்து கொள்ள இயலவில்லை என்று மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். நெல்லித்தோப்பு தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு அளித்தார். இந்திரா நூற்றாண்டு விழாவில் பங்கேற்று ராகுல் பிரதமர் ஆவார். காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்று கூறினார். காங்கிரஸ் ஆட்சி தான் இப்போதைய சூழலில் தேவையானது என்று பேசி வருகிறார். இதன் மூலம் திருமா காங்கிரஸ் பக்கம் திரும்பிவிட்டார் என்றே தெரிகிறது. அடுத்து வரும் தேர்தலில் மக்கள் நல கூட்டணி இருக்கப் போவதில்லை. கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் தஞ்சம் அடைந்துவிடும் என்றே நான் நினைக்கிறேன். இந்நிலையில் எனக்கு வேறு வழியில்லை, எனது தாய், சகோதரி ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்து வெளியே வரும் வரை மோடியை இறுக பற்றிகொள்வேன் என்று கூறி மோடிக்கு இன்னொரு சல்யூட் வைத்தார்.

There are no comments yet