சென்னை: நடிகர் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம் இரண்டாவது முறையாக 27 நவம்பர் 2016 அன்று தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. முன்னதாக லயோலா கல்லூரியில் நடைபெறுவதாக இருந்த கூட்டம் பிரபலமில்லாத துணை நடிகர் எம். ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கால் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், விஷால், கார்த்தி அடங்கிய புதிய நிர்வாகிகள், சங்கத்தின் முன்னள் நிர்வாகிகளான சரத்குமார் மற்றும் ராதாரவியை நிரந்தரமாக நீக்கியதாக கூறி அனைத்து உறுப்பினர்கள் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்தமான கூடுவாஞ்சேரி வெங்கடாபுரத்தில் இருந்த 26 செண்ட் நிலம், முன்னள் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, து. தலைவர் கே. ஆர். செல்வராஜ், மானேஜர் நடேசன் அகியோரால் முறைகேடாக விற்பனை செய்துள்ளதாக கூட்டத்தில் அதிர்ச்சிகரமான தகவல் கூறப்பட்டது. 1.65 கோடி பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய நிர்வாகிகள் தங்களை நீக்கி தன்னிச்சையாக முடிவெடுத்ததை சட்டத்தின் வாயிலாக நீதிமன்றத்தின் உதவியுடன் எதிர்கொள்வோம் என்று சரத்குமார் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.194823nattamai

பின்னர் வீட்டுக்கு வந்து தனது தினசரி வெயிட் லிப்டிங்கில் இருந்தவர் நமது கப்ஸா நிருபரை கண்டதும் வெகுண்டெழுந்து தனது பாடி பில்டர் தொடையில் தட்டி பல்லைக் கடித்தபடி கூறியதாவது: எம்ஜிஆர் நடிப்பால் ஈர்க்கப்பட்டு, சொந்தமாக படம் தயாரித்து பத்திரிகையாளனாக இருந்து நடிகனாக மாறியவன் நான். அரசியல் ஆதாயத்துக்காக முதல் மனைவி இருக்கும்போதே ராதிகாவை ‘புரட்சி ‘ திருமணம் செய்தேன். 2011 சட்டமன்ற தேர்தலில் அம்மா காலில் விழுந்து எம்ஜிஆர் போல் உதட்டை கடித்து நடித்து காட்டி எம்.எல்.ஏ ஆனேன். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, நடிகர் சங்க தேர்தலில் தோல்வியை தழுவினேன். அதன் பின் சமீபத்திய தேர்தலில் திருச்செந்தூரில் திருவோடு ஏந்தினேன். சில்லறை கூட மிஞ்சவில்லை. நடிப்பு என் தொழில், அரசியல் மக்களுக்காற்றும் சேவை, பல கோடி பணம் எனக்குத் தேவை. அதனால் தொடர்ந்து நடிக்கிறேன். நாட்டாமை, குளத்து ஆமை போன்ற படங்களில் நடித்து சேர்த்து ‘சொம்பு’ வாங்க வைத்திருந்த சில லட்சங்களை திருச்செந்தூரில் பிரசாரத்தின் போது தேர்தல் அதிகாரிகள் அபகரித்து விட்டனர். 28-sarathkumar-600அதனால் நடிகர்சங்க நிலத்தை விற்று பணத்தட்டுப்பாட்டை சரிக் கட்டினேன். எனது சினிமா வாழ்வின் உச்சத்தில் நாட்டமையாக இருந்த போதே கொடூர வில்லன் பொன்னம்பலத்தை ஊரைவிட்டே ஒதுக்கி வைத்து, மக்கள் யாரும் அன்னந்தண்ணி புழங்கக் கூடாது என்று தீர்ப்பு சொன்னவன் நான். நேற்று வந்த இந்த விஷால் என்னை நடிகர் சங்கத்தில் இருந்து ஒதுக்கி வைப்பதா? நட்சத்திர கிரிக்கெட்டில் அவர்கள் அடித்த 3 கோடியை பதுக்கி வைப்பதா? இந்த நட்டாமை பாதம் பட்டா நடிகர் சங்கமும் தூளாகும், இந்த நாட்டாமை கையசைச்சா கருங்கல் கட்டிடமும் குட்டிச்சுவராகும்.. எலே சம்முகம், உடுறா வண்டிய ஐகோர்டுக்கு, இந்த் வழக்கை அங்க இருக்கிற ஆலமரத்தடியில வச்சு பைசல் பண்ணிடுவோம்” என்று சாரட் வண்டியில் ஏறி சூளுரைத்தபடி கிளம்பினார்.

பகிர்

There are no comments yet