புது டெல்லி: மோடியின் ‘செல்லாது’ அறிவிப்பிற்கு பிறகு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள பொதுமக்களுக்கு டிச. 31 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பணத்தை ரிசர்வ் வங்கியில் ஒப்புதல் கடிதம் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம் கருப்பு பணம் வெளியே வரும் என்று மோடி அரசு நம்புகிறது. இருந்தபோதும் பொதுமக்கள் அன்றாட செலவுகளுக்கு பணம் கிடைக்காமல் தத்தளித்து வருகின்றனர். இதற்கிடையே பாஜக எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் நவ. 8ம் தேதி முதல், டிச. 31 தேதி வரையிலான தங்கள் வங்கி பரிவர்த்தனை விவரங்கள் அனைத்தையும் அமித்ஷாவிடம் தாக்கல் செய்யவேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மோடி நமது கப்சா நிருபருக்கு ஸ்கைப் காலில் அளித்த பேட்டி: நான் பொதுமக்களுக்கு மட்டுமே ரகசியாமாக வைத்திருந்த ‘செல்லாது’ அறிவிப்பை, முன்னரே பாஜக பெரும்புள்ளிகளுக்கு கசிய விட்டு மொத்த கட்சி பணத்தையும் தங்கமாக மாற்றி வைக்க சொல்லிவிட்டேன். இதை எப்படியோ கெஜ்ரிவால் மோப்பம் பிடித்து குற்றம் சாட்டினார். ஆனால் மக்கள் தேனீர் குடிக்க கூட காசில்லாததால் அதை எல்லாம் மறந்து விட்டார்கள். ராஜஸ்தான் எம் எல் ஏ பவானி சிங் ரஜாவத் கூட பணத்தை மாற்ற முடியாமல் அந்த கடுப்பில் தான் அம்பானி அதானிக்கு முன்பே இத்தகவல் தெரியும் என்று குட்டை உடைத்தார். தமிழகத்தில் சேலம் பாஜக நிர்வாகியிடம் 18 லட்சம் 50 ஆயிரத்துக்கு நான் பார்த்து பார்த்து பூட்டான் லாட்டரி வடிவில் தயாரித்த புது 2000 நோட்டு சிக்கியது கவலை அளிக்கிறது. மகாராஷ்டிராவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் சுபாஷ் தேஷ்முக் 94 லட்சம் பழைய நோட்டுக்களை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தாரை வார்த்தார். இதில் பணத்தை மாற்ற நேரம் மற்றும் வாய்ப்பு கிடைக்காத பாஜக நிர்வாகிகள், தலைவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பாக ஒரு திட்டம் வைத்துள்ளேன். அது தான் பாஜக கரண்ட் அக்கவுண்ட். தற்போது பாஜக நடத்திக் கொண்டிருக்கும் கரன்சி வியாபாரம் மூலம் கிடைக்கும் பணம் அனைத்து, கரண்ட் அக்கவுண்டில் வைக்கப்பட்டு பாஜகவின் அன்றாட செலவுகளுக்கு பயன்படுத்தப்படும். ஏடிஎம், வங்கிகளில் மக்களை அல்லோல கல்லோலப்பட வைத்துவிட்டு பாஜக வின் கட்சிப்பணம் பழைய நோட்டுக்களாக உள்ள பல்லாயிரம் கோடிகளை பத்திரமாக மீட்டெடுக்கும் ரகசிய முயற்சியில் எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் வங்கிப் பரிவர்த்தனைகளை கேட்டுள்ளேன். 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் சில்லரை மாற்ற முடியாமல் மக்கள் அவதிப்பட்டும் காலத்திற்குள்ளாகவே காதும் காதும் வைத்த மாதிரி கரன்சிகளை கரண்ட் அக்க்வுண்டில் வரவு வைக்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன்” என்றார்.
There are no comments yet
Or use one of these social networks