சென்னை:முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரி, நேற்று முன்தினம் சென்னையில், நேற்று காலை, தன் மனைவி காந்தியுடன், கோபாலபுரம் வீட்டுக்கு, பின் வாசல் வழியாக சென்றார். கீழ் தளத்தில் உள்ள அறையில்,தாயார் தயாளுவை, அழகிரி, காந்தி ஆகியோர் சந்தி த்து,உடல் நலம் விசாரித்தனர். அப்போது, மாடி யில் உள்ள அறையில், கருணாநிதிக்கு, அவரது மருத்து வர்கள் சிகிச்சை அளித்து கொண்டிருந்தனர்; அவரது மகள் செல்வி, அருகில் இருந்தார்.
டாக்டர்கள் சென்றதும், மாடி அறைக்கு அழகிரியும், காந்தியும் சென்று, கருணாநிதியைசந்தித்து பேசினர். அப்போது, தந்தையின் உடல் நிலையை பார்த்து, அழகிரி கண் கலங்கினார். சிறிது நேரத்தில், ஸ்டாலினும் வந்தார். அண்ணனும், தம்பியும் சந்தித்து கொண்டனர். இரண்டு ஆண்டு களுக்கு பின் நடக்கும் சந்திப்பு என்பதால், இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர்.அதை பார்த்ததும்,கருணாநிதி மகிழ்ச்சி அடைந்து, ‘இரு வரும் ஒற்றுமையாக இருங்கள்’ என கூறி, வாழ்த்தி னார். அதை ஆமோதிக்கும் வகை யில், இருவரும் தலையாட்டினர்.
பின், அழகிரி, ஸ்டாலின், செல்வி ஆகியோர் தனி யாக பேசினர்.கருணாநிதிக்கு அளிக்க வேண்டிய மேல் சிகிச்சைகள் குறித்து, மூவரும் ஆலோசித் தனர். அதையடுத்து, அழகிரி, மனைவி காந்தி யுடன், பின்வாசல் வழியாக வெளியேறினார்; ஸ்டாலின், முன்வாசல் வழியாக, புறப்பட்டு சென்றார்.
இதையடுத்து, தான் கண்டது கனவா, நினைவா என்று ஆனந்த அதிர்ச்சியில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊட்டச்சத்து குறைபாடு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், இதன் பின்னணியில் ஸ்டாலின் அழகிரி சந்திப்பு இருப்பதாக நம்பத்தகாத வட்டாரங்கள் கூறுகின்றன.
There are no comments yet
Or use one of these social networks