சென்னை: நீர்ச்சத்து, ஊட்டச்சத்து குறைவால், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத் துவமனையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று அனுமதிக்கப்பட்டார்.ஒவ்வாமை காரணமாக, கருணாநிதியின் கை, கால்களில்,கொப்பளங்கள் ஏற்பட்டன.இதனால், ஒன்றரை மாதங்களாக, வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். லண்டனிலிருந்தும் இதற்கான பிரத்யேக டாக்டர் வந்து, அவருக்கு சிகிச்சை அளித்தார். தொடர் சிகிச்சையால், அவரது உடல் நிலையில், முன்னேற்றம் ஏற்பட்டது.

டாக்டர்கள் அறிவுரைப்படி, வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். நேற்று முன்தினம், கருணா நிதிக்கு, டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை நடத்தினர். அப்போது, அஜீரண கோளாறால், சரியாக சாப்பிட முடியாமல் அவதிப்பட்டதை இதன்படி, நேற்று காலை, 5:50 மணிக்கு, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவ மனையில்,நான்காவது மாடியில் உள்ள தனி அறை யில், கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, மகன்கள் ஸ்டாலின், அழகிரி, மகள் கனிமொழி உள்ளிட்ட அவர்களின் குடும்பத்தினர், கட்சியின் முக்கிய நிர் வாகிகள் மட்டும், கருணாநிதியின் அறைக்கு சென்ற னர்.மற்றவர்களுக்கு, அனுமதி அளிக்கப்பட வில்லை.kauvery-hospital_11216

அழகிரி வந்து பார்த்ததால் அதிர்ச்சியும், வேதனையையும் கலந்து முகத்தில் கலக்கத்துடன் இருந்த தி.மு.க.,பொருளாளர் ஸ்டாலின் நமது கப்ஸா நிருபரிடம் கூறுகையில், ” காவேரி மருத்துவமனையில் கலைஞர் அட்மிட் ஆனது அவரது தமிழ் பற்றை பறை சாற்றுகிறது. அப்பல்லோ என்பது ஒரு கிரேக்க வார்த்தை. அது மட்டுமல்லாமல் அப்பல்லோ என்பது மருத்துவ கடவுளை குறிக்கும் சொல், எங்களது மொழிப்பற்றையும், கடவுள் மறுப்பையும் கைவிடாமல் இருக்கவே அப்பாவை காவேரியில் சேர்த்தோம். இதிலிருந்தே எங்களுக்கு காவேரி மேல் எவ்வளவு அக்கறை, மற்றும் அன்பு இருப்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். அப்பா நலமுடன் உள்ளார். இன்னும் ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார்,” என்றார்.

பகிர்

There are no comments yet