புதுடெல்லி: ‘ஆபிஸ் ஆப் ஆர்ஜி’ என்ற பெயரில் காங். துணைத்தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் கணக்கில் மக்களோடு உரையாடி வருகிறார். அவரை பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் ராகுல் காந்தியின் கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டு காங்கிரஸ் கட்சியைப் பற்றியும், காந்தி குடும்பத்தினரைப் பற்றியும் ஆபாசமான கருத்துக்கள் பதிவிடப்பட்டன. மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்து இப்படி ஆபாச வாரத்தைகளை பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதை சரி செய்வதற்கான முயற்சிகள் தொடரும் நிலையில், காங் து. தலைவருக்கே இந்த கதி என்றால் நாட்டில் உள்ள மற்றவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது எனற குற்றச்சாட்டு எழுகிறது.. முக்கிய துறைகளில் டிஜிட்டல் மயமாக்கம் என கூறும் பாஜக மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது என காங்கிரஸ் தரப்பில் கண்டனம் எழுந்துள்ளது. சமீபத்தில் கூட தமிழக அரசின் இணைய தளம் பாக் தீவிரவாதிகளால் முடக்கப்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.rahul-twitter-handle

இது குறித்து நம் கப்சா நிருபர் லேப்டாப்பில் ஜியோ சிம்மில் கிடைத்த இலவச இன்டர்நெட்டில் செய்த புலனாய்வில் இது பாஜக வின் திட்டமிடாத சதி என்று தெரிய வந்தது. மோடி சார்பாக பாஜக டிஜிட்டல் நிர்வாகி ஸ்கைப் சாட்டிங்கில் கப்சா நிருபரிடம் கூறியதாவது: ” ‘செல்லாது’ அறிவிப்பின் மூலம் ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தின் முதுகெலும்பை ஆட்டிப்பாரத்த பாஜக ஆட்சியில் டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் மேலும் பல ஹைடெக் ஊழல் புரியும் திட்டம் உள்ளது.. அதன் முதன் முயற்சியாக ராகுல் டுவிட்டர் முடக்கப்பட்டது. அரசியல் கூட்டங்களில் அவதூறு பேசினால் வழக்கு போடுகின்ளனர். காங்கிரஸ் ‘கை’யாலேயே காங்கிரஸ் கண்ணை குத்தும் பாஜக வின் ராஜதந்திரம் இது. 6 வித்தியாசங்களை கொண்ட 500 ரூபாய் நோட்டுகளையும் 9 வித்தியாசங்களை கொண்ட 1000 நோட்டுகளையும் அரைகுறையாக டிஜிட்டல் பிரிண்ட் செய்த (500 என்ற) 250 ரூபாய் நோட்டுகளையும் ஏற்கனவே பொதுமக்கள் வரவற்றுள்ளனர். பல தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் கிரெடிட்/டெபிட் கார்டுகளின் பின் நம்பர்களும் எங்கள் ஆட்சியில் தான் ‘ஹேக்’ செய்த பெருமையும் உள்ளது. பொதுமக்கள் தங்கள் சிறுசேமிப்பு பணத்தைக் கூட எடுக்க முடியாமல் அதிரடி அறிவிப்புகளை தந்த பாஜக அரசு, ஹேக்கர்களின் உதவியுடன் பொதுமக்கள் வங்கிக்கணக்கில் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி 15 லட்சம் டெபாசிட் செய்தது போல செய்து விட்டு உடனடியாக பணத்தை கணக்கில் இருந்து அத்தியாவசிய செலவுகளுக்காக எடுத்தது போல அக்கவுண்டில் காட்ட செய்வோம். பின்னர் அந்த பணத்தில் உல்லாச பயணம் போனது போல அவர்களின் பேஸ்புக் கணக்கில் நாங்களே ஸ்டட்டஸ் பதிவிடுவோம். லைக்குகளும் கொடுப்போம். இதற்காக ஆதார் அட்டையுடன் பொதுமக்களின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்கை இணைக்கலாம் என்று பிரதமர் மோடி யோசனை தந்துள்ளார். மொபைல் போன், வங்கி பரிவர்த்தனைகளையும் எங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து, மக்களை ஒரு ‘கீழ்ப்பாக்க’ குழப்ப மனநிலையில் வைத்து ஆட்சி புரிவோம். ‘செல்லாது’ அறிவிப்புக்கு மக்கள் 93 சதவிகித ஆதரவு என்பது கூட எங்கள் சித்து விளையாட்டுதான். தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளை காக்கும் விதமாக தங்களுக்கு தேவையான அரிசியை தங்கள் மொபைல் போனில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.” என்றார்

பகிர்

There are no comments yet