புது டெல்லி: ஊழலையும் கறுப்புப் பணத்தையும் ஒழிக்கும் நடவடிக்கையாக, ரொக்கப் பணமில்லா பரிவர்த்தனை நோக்கிய இந்திய பொருளாதாரத்தின் அவசியத்தை பிரதமர் நரேந்திர மோடி விளக்கியிருக்கிறார். இது தொடர்பாக, இன்று நமது உங்கள் நியூஸ் அலுவலகத்திற்கு புறா மூலம் அனுப்பிய அவரது விளக்கக் அறிக்கையின் 10 முக்கிய அம்சங்கள்:

1. ஒரு ஆண் 2 பெண்களை திருமணம் செய்தால் ஒன்று பறிமுதல் செய்யப்படும்.

2. ஒரு குடும்பத்துக்கு 500 சதுர அடிக்கு மேல் வீடு இருந்தால், கூடுதலான பகுதி இடிக்கப்படும்.

3. ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தைக்கு மேல் இருந்தால் கூடுதலாக உள்ள குழந்தைகள் நாடு கடத்தப்படும்.

4. ஆண்கள் 5 சட்டை, 5 பேன்ட், 5 பனியன், 5 ஜட்டி, 5 வேட்டி, 5 கைக்குட்டை, 5 டவல்கள், ஒரு ஜோடி ஷூ, ஒரு ஜோடி செருப்புக்கு மேல் வைத்திருக்கக் கூடாது.

5. பெண்கள் 5 சேலை, 5 தாவணி, 5 சுடிதார், 5 லெக்கிங்ஸ், 5 உள்ளாடை, 2 ஜோடி செருப்புகள் மட்டுமே வைத்திருக்கலாம்.

6. ஹோட்லில் சாப்பிடுபவர் காலை டிபன் 20 ரூபாய், மதியம் சாப்பாடு 50 ரூபாய், இரவு உணவு 20 ரூபாய்க்கு மேல் சாப்பிட்டால் சோத்து வரி வசூலிக்கப்படும்.

7. இருசக்கர வாகனங்களுக்கு மாதம் 2 லிட்டர் பெட்ரோல் மட்டுமே வழங்கப்படும்.

8. கார் வைத்திருந்தால் மாதம் 20 லிட்டர் எரிபொருள் மட்டுமே வழங்கப்படும்.

9. ஒரு வீட்டுக்கு மாதம் 50 யூனிட் மட்டுமே மின்சாரம் வழங்கப்படும்.

10. மாதம் 500 ரூபாய்க்கு மேல் மளிகைப் பொருட்கள் வாங்கினால் மசாலா வரி விதிக்கப்படும்.

மேற்கண்ட பத்து அம்ச திட்டத்தை உடனடியாக நிறைவேற்றி இந்தியா முழுவதும் கருப்பு பணமே இல்லாமல் செய்ய மோடி முடிவு செய்திருப்பதாக டெல்லியில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

There are no comments yet