சென்னை: வரும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து தமிழக ஆளுனர் வித்யாசகர் ராவை சந்தித்துப் பேசிய மதிமுக தலைவர் வைகோ ‘விபத்து ஏற்படும் என்பதற்காக சாலையில் கார்களை ஓட்டாமல் இருக்க முடியுமா?’ என்று கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. ஜல்லிக்கட்டு மற்றும் நோட்டு விவகாரம் தொடர்பாக இருவரும் சந்தித்துப் பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது. “ஆளுனர் எனது நண்பர். கடந்த முறை போல இந்த முறையும் நட்பு ரீதியாக சந்தித்தேன். தமிழகத்தின் பல நிகழ்வுகளைப் பற்றி உரையாடினேன். அது பற்றி கருத்து கூற முடியாது. தமிழர்களின் கலாசாரமான ஜல்லிக்கட்டை நடத்த வரும் பொங்கல் பண்டிகையில் அனுமதி வழங்குமாறு பிரதமரிடம் வலியுறுத்துமாறு கூறினேன்” என்று பேட்டியளித்தார்.

அப்போது ஆளுனர் மாளிகையை விட்டு வெளியே வந்த வைகோவின் கால் டாக்சி ஒருவர் மீது மோதுவது போல் பிரேக் போட்டு நின்றது. அந்த ஒருவர் நமது கப்சா நிருபர். அவரிடம் வைகோ அளித்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டி: ‘கோ’ என்றால் பசு என்று அர்த்தம். அதனால் தான் கோபால்சாமி என்று பெற்றோர் வைத்தபெயரை சுருக்கி வை ‘கோ’ என்று வைத்துக் கொண்டேன். பசுவுக்கு தான் காளை மாட்டின் விளையட்டான ஜல்லிக்கட்டு பற்றி நன்கு தெரியும்” என்று பெயர்க்கரணம் சொன்னார். தொடர்ந்து அடுக்கு மொழியில் துடுக்குத்தனமாக கூறியதாவது: “மூட்டு வலிக்கும் என்பதால் நான் நடைபயணம் செல்வதை நிறுத்தி இருக்கிறேனா? கண்டைனர் சிக்கிக் கொள்ளும் என்பதால் கரன்சியை கடத்தாமல்தான் இருக்க முடியுமா? பாம்பு கடித்து விடும் என்று தெரிந்தும் புத்துக்குள் கை விட்டது போல், விஜயகாந்த் என்ற பீனிக்ஸ் பறவை என்னிடம் சிக்கி சின்னாபின்னமானது தெரியாதா?vaiko-mdmk ‘என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன், கவிழ்ந்துவிட மட்டேன்’ என்று கலைஞர் சொன்னபோது, ‘அந்த கள்ளத்தோணியில் ஏறி நான் பிரபாகரனைப் பார்க்க இலங்கைக்குப் போய் விடுவேன்’ என்று அறிக்கை விடவில்லையா? கெட்ட பெயர் வரும் என்பதற்காக கள்ளத்தோணி ஏறாமல் இருக்கத்தான் முடியுமா? சூழ்ச்சிக்காரன் என்பார்கள் என்பதற்காக நான் மக்கள் நல கூட்டணியில் தொடர்ந்த்து சூனியம் வைக்க வில்லையா? துதி பாடுகிறேன் என்பார்கள் அதற்காக நான் மதிமுகம் டிவியை கைவிட்டுவிட முடியுமா? செல்லாக்காசாகிவிடும் என்று தெரிந்தும் நான் அம்மாவிடம் கேஷ் வாங்கியது போல, குடல் சரிந்துவிடும் என்று தெரிந்தாலும் காளை மாட்டை அடக்கி விளையாடும் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை தமிழகத்தில் மத்திய அரசு அனுமதித்தே தீர வேண்டும்” என்று பொருமினார்.

பகிர்

There are no comments yet