புகைப்படம் நன்றி: பிடிஐ

சென்னை: மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ‘நடா’ புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டைப் போல் இல்லாமல் இந்த ஆண்டு நிறுத்தி நிதானமாக மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். டிசம்பர் 1ம் தேதி மற்றும் 2ம் தேதி மணிக்கு 60ல் இருந்து 70 கி மீ வேகத்துடன் காற்று வீச வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. 2004 ஆம் ஆண்டுக்குப் பின் வங்கக்ககடல், அரபிக் கடலில் உருவான இந்த 45 ஆவது புயலுக்கு ‘நடா’ என்று பெயரிடப்பட்டது. இந்தப் பெயரை சூட்டியது ஓமன் நாடு.

தயார் நிலையில் பேரிடர் மீட்பு படைகள்: புயல் எச்சரிக்கை விடப்பட்டு 1070, 1077 என்ற கட்டணமில்லாத தொலைபேசி அழைப்புகள் பயன்படுத்தலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் வானிலை ஆரய்ச்சி மையம் கூறியது போல் புயலோ, வெள்ளமோ வராதது கண்டு சென்னை, கடலூர், நாகை மாவட்ட மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர். நாகை மாவட்டம் தகட்டூர் தேனீர் கடையில் வான சாஸ்திர வானிலை ஆராய்ச்சியாளர் ந.செல்வகுமார் என்பவரால் எழுதப்பட்ட தகவல் படி டிச. 4 தேதிக்கு பிறகு மலேசியா இந்தோனேசியா இடைப்பட்ட கடல் பரப்பில் தாழ்வு மண்டலம் உருவாகி புயலாக தீவிரமடையும் புயலை ‘வர்டா’ என பெயர் சூட்டி உள்ளார்.jayalalitha sticker

தகட்டூர் தேனீர் கடையில் புயல் நிலவரம் குறித்து நேரடி நிலவரம் சேகரிக்க சென்ற நமது கப்ஸா நிருபரிடம் வழக்கம் போல் ஓசி ராகி மால்ட் வாங்கி குடித்த அதிமுக தொண்டர் அளித்த பேட்டி: “மழை பாதிப்பில் இருந்து தப்பிக்க சமைக்காமல் சாப்பிடக் கூடிய பிரட், பிஸ்கட், பழங்களை சேமித்து வைக்க தமிழக அரசு பொது மக்களுக்கு அறிவுரை வெளியிட்டது போல அப்பல்லோ அட்மிட்டுக்கு பிறகு ‘அதிமுக பக்தர்கள்’ என்று செல்லாமாக அழைக்கப்படும் எங்களுக்கு ரகசிய ஆணை பிறப்பித்து தானாகவே ஒட்டிகொள்ளும் செல்ஃப் ஸ்டிக்கிங் அம்மா ஸ்டிக்கர்கள் ஆயிரக்கணக்கில் அச்சடித்துக் கொடுத்துள்ளார்கள். அம்மா குணமடைந்து விட்டார், அம்மா டிஸ்சார்ஜ் ஆகிறார், அம்மா ஸ்பீக்கர் உதவியுடன் பேசுகிறார் என்பது போல் மழை வரும், கனமழை வரும் என ஆளாளுக்கு மிரட்டி கொண்டிருக்க, பெருந்தன்மையோடு ‘நடா’ நடந்து சென்று விட்டதால், கையில் வைத்துக் கொண்டிருக்கும் ஸ்டிக்கர்களை ஒட்ட இடமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். வெள்ள நிவாரண பொருட்கள் முதல் மணமக்கள் நெற்றி வரை அம்மா ஸ்டிக்கரை ஒட்டி சென்ற முறை ஒரு கலக்கு கலக்கினோம். 2015 சென்னை, கடலூர் வெள்ள பாதிப்புகள் நினைவு இருக்கிறதா? அதை மறந்தாலும், அப்போது நடந்த “ஒட்டுறா ஸ்டிக்கர்” அட்ராசிட்டிகளை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. ஏழை, பணக்காரன் என்ற எந்தவித வித்தியாசமும் இன்றி ஒரு பாக்கெட் பிஸ்கெட்டிற்காகவும், ஒரு பாட்டில் குடிநீருக்காவும் நின்றபோது பிரியாணியும் குவார்ட்டரும் சாப்பிட்டுவிட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டி பழகி விட்டது. மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நிவாரண உதவிகளுக்காகக் காத்துக்கிடந்தாலும், நிவாரணப் பொருட்களில் அம்மா படத்தை ஒட்டித்தான் கொடுக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பினார்கள், செல்லாத 1000 500 ரூபாய் தாள்களைப்போல் அம்மா ஸ்டிக்கர்களும் உதவாக்கரை காகிதங்களாகப் போய் விட்டதே. ‘நடா’ பொய்த்துவிட்டது. அடுத்த புயல் ‘வர்டா’வுக்காக இருக்கும் இடங்களில் அப்படியே நங்கூரமிட்டு ஸ்டிக்கர்களோடு காத்துக் கொண்டிருக்கிறோம்.” என்றார்

பகிர்

There are no comments yet