புகைப்படம் நன்றி: இந்தியா டுடே

சென்னை: கபாலி திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கரின் 2.0 படப்பிடிப்பில் பிஸி ஆனார் ரஜினி. இந்தப்படத்திற்கான படப்பிடிப்பு மேலக்கொட்டையூரின் உள்ள தனியார் இஞ்சினியரிங் கல்லூரியில் நடந்து கொண்டிருந்தபோது காலில் அடிபட்டதாகவும், ரஜினி தனக்கு மயக்கமாக உள்ளதாக கூறியதாகவும், கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு செல்ல விரும்புவதாகவும் ஷங்கரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு சம்மதிக்காத ஷங்கர் உடனடியாக கேளம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார் என கூறப்படுகிறது. ரஜினி சில நாட்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியதாகவும், பரிசோதனை முடிந்த உடன் ரஜினி வீடு திரும்பியதாகவும் செய்திகள் உலா வருகின்றன.

இந்த செய்தியின் உண்மைத் தன்மையை உலகுக்கு எடுத்துக் கூற மிகுந்த பாதுகாப்புடன் வெளி ஆட்கள் அனுமதிக்கப்படாமல் நடைபெறும் ஷங்கர் பட ஷூட்டிங்கில் ‘லைட் மேன்’ வேடத்தில் பதுங்கி இருந்த நமது கப்ஸா நிருபர் சேகரித்த செய்தி: சமீபத்தில் செல்லாது அறிவிப்பின் போது ‘புதிய இந்தியா பிறந்துள்ளது’ என்று ரஜினி சொன்னது நினைவிருக்கலாம். அப்போது ரஜினி முன்னதாக நடித்த கபாலி திரைப்படத்தின் வசூல் எவ்வளவு என்று வெளியிட ரஜினி தாயாரா இயக்குனர் அமீர் கேள்வி எழுப்பினார். மேலும் படம் வந்த போது ஆயிரக்கணக்கில் டிக்கட் விலையற்றி விற்கப்பட்டதால் வயதில் மூத்த ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து பேனர்களை கிழித்து சென்ற நாடகமும் நடந்தேறியது. மேலும் ஒரு ரசிகர் வயதில் பெரியவரான ரஜினியை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் துன்புறுத்துவதாகவும் அவரை பத்திரமாக மீட்டு முதியோர் இல்லத்தில் சேர்க்க வேண்டும் என்றும் காவல் துறையிடம் புகார் கொடுத்தார்.rajinikanth-robo-2-0

இதையறிந்த ஷங்கர் ரஜினியின் நிலையை புரிந்து கொண்டு, மாற்று ஏற்பாடு செய்திருந்தார். ரஜினிக்கு வயது 65 ஆகிறது. முன்னைப்போல் ஓடி ஆடி நடிக்க முடியவில்லை என்பதால் 2.0 படப்பிடிப்பில் பழைய 1000, 500 நோட்டுக்களை கொடுத்து சீனாவில் இருந்து வாங்கிய ரோபோ நடித்துக் கொண்டிருந்தது. ஷங்கர் புளூடூத் வசதியுடன் கட்டளையிட்டு ரஜினி ரோபோவை இயக்கிக் கொண்டிருந்தார் காலை 7 மணி முதல் 8 மணி வரை இடைவிடாது நடித்துக் கொண்டிருந்ததால் சார்ஜ் இறங்கியதை படக்குழு கவனிக்க மறந்து விட்டார்கள். மேலும் ரோபோவின் முழங்காலில் இருந்த நட்டு 2.0 அங்குலம் நகர்ந்ததால் ‘களுக்’ என்ற சத்ததுடன் நிலை தடுமாறி விழுந்தது. அப்போது 2.0 மீட்டர் தள்ளி அமர்ந்து கதாபாத்திரத்துடன் ஒன்றி ரோபோவுக்கு ‘ப்ராக்சி’ கொடுத்து நடித்துக் கொண்டிருந்த ரஜினிக்கு காலில் வலி ஏற்பட்டது போல் தெரிந்ததாம். உடனடியாக் சீனாவில் இருந்து வாங்கிய ரோபோவுக்கு ஜாயிண்டுகளில் போட வைத்திருந்த ‘கோடாலி’ தைலம் தேய்த்து விடப்பட்டது. பின்னர் ஷங்கருக்கும் ரோபோவுக்கும் டாடா சொல்லிவிட்டி, நோட்டு மாற்ற ‘கால’க்கெடு நெருங்குவதால் ரஜினி தனது பண்ணை வீட்டுக்கு சென்று பழைய பணத்தை மீண்டும் மீண்டும் எண்ணி அன்றைய பொழுதை கழித்ததாக கோடம்பாக்கம் பட்சி ஒன்று கூறுகிறது.

பகிர்

There are no comments yet