சென்னை: கடந்த டிச. 1 அன்று அதிகாலையில் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியிடம், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு செய்தியை கனிமொழி சொன்னதும், சிலநிமிடங்கள் எதுவும் பேசாமல் அமைதி காத்துவிட்டு ‘அந்த அம்மாவைப் போய் பார்துட்டு வாம்மா’ எனக் கூறி கனிமொழியை அனுவைத்ததாக கூறுகின்றனர். ஒரு வார காலமாக மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் கருணாநிதி டிச.7 அன்று வீடு திரும்பினார்.

93 வயதை கடந்தும் இன்னும் சர்க்கரை நோயோ, இரத்த கொதிப்போ இல்லை. வயது முதிர்வின் காரணமாக வரும் பிரச்சனைகள் உண்டு. ஏழு முதலமைச்சர்களின் இறுதிச்சடங்கை கண்ணால் பார்த்தவர் என்ற ‘பெருமை’க்கு உரியவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் கருணாநிதி. அதவாது ராஜாஜி, அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர், ஜானகி, நெடுஞ்செழியன், தற்போது ஜெயலலிதா. காவேரி மருத்துவமனையில் நமது கப்ஸா நிருபர் கம்பவுண்டர் வேடத்தில் பதுங்கியிருந்து விசாரித்ததில் முன்பு ‘ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆவதைப் பற்றி ஜெயலலிதாவே முடிவு செய்வார்’ என்று அப்பல்லோ வட்டாரத்தில் முன்பு கூறியது போல், காவேரி மருத்துவமனையில் இருந்தே தன்னைத்தானே டிஸ்சார்ஜ் செய்து கொண்டு கோபாலபுரம் திரும்பிய கருணாநிதி, தான் நல்ல உடல் நலத்துடன் இருக்கும்போதே, திமுக வின் அடுத்த வாரிசு யார் என்ற முடிவை எடுக்க வேண்டும் என்றும், திமுக வின் அடுத்த பொதுச்செயலாளர் ஸ்டாலினா, அழகிரியா, கனிமொழியா என்பதை சீக்கிரம் அறிவித்துவிட முனைப்பு காட்டுவதாகவும் தெரிகிறது. அழகிரி இரண்டொரு முறை கருணாநிதியை சந்தித்து முரசொலி அறக்கட்டளையில் நிர்வாகி பதவியை தன் மகனுக்கு பெறும் பொருட்டு திமுக அறக்கட்டளையின் உறுப்பினர் பதவியை தன் மகன் தயாநிதிக்கு வழங்க வேண்டும் என்று நச்சரித்து வருவதும் அதற்கு ஸ்டாலின் கடும் மறுப்பு தெரிவித்து தற்காலிகமாக நீக்கப்பட்டு பின்னார் நிரந்தரமாக நீக்கப்பட்ட அழகிரிக்கும் அவரது மகனுக்கும் பதவி ஏதும் வழங்கக்கூடாது என்று கூறி வருவதும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.karunanidhi-anbalagan

இந்த சூழ்நிலையில், இன்று காலை கருணாநிதி தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். இதில், கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், மூத்த நிர்வாகிகள் ஏ.வ.வேலு, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இது குறித்து தலைவருக்கு நெருக்கமான ஒரு உடன்பிறப்பு கூறும்போது “அப்பல்லோவில் சிகிச்சைக்காக சேர்ந்த தலைவர்கள் வீடு திரும்பியதில்லை, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், ராஜாஜி, மூப்பனார், ஜெயலலிதா, மற்றும் சோ. இப்போ புரியுதா ஏன் கலைஞர் காவேரில சேர்ந்தார் என்று. தலைவர் காவேரியை கவுத்து இருக்கலாம், .ஆனா தலைவரை காவேரி கவுக்காது. எத்தனை எம்.எல்.ஏக்களை இழுக்கலாம், யார்கிட்ட என்ன ரேட்டு பேசலாம்னு இப்போ ஆலோசனை ஓடிக்கிட்டு இருக்கும். இந்நேரம் பல பேருக்கு போன் கூட பறந்து இருக்கும். கைப்புள்ள அருவாளோட கெளம்பிருச்சு. எத்தனை தலை அதிமுகவில் விழ போகுதோ தெரியல என்று பெருமையுடன் கூறினார்.

பகிர்

There are no comments yet