சென்னை: தே.மு.தி.க.,வில், முக்கிய பொறுப்பில் இல்லா விட்டாலும், விஜயகாந்த் மனைவி பிரேமலதா, செயல் தலைவர் போல செயல்பட்டு வருகிறார். கட்சியின் பின்னடைவுக்கு அவரே காரணம் எனக்கூறி, முக்கிய நிர்வாகிகள், பிற கட்சிகளுக்கு தாவி விட்டனர். சமீபத்தில் நடந்த, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப் பரங்குன்றம் சட்டசபை தொகுதிதேர்தல்களில், தே.மு.தி.க., படுதோல்வி அடைந்ததால், கட்சியின ரின் கோபம், பிரேமலதா பக்கம் திரும்பியது. அவரை யும், அவரது சகோதரர் சுதீஷை யும், சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், ஜெயலலிதா, உடல்நலக் குறைவால் இறந்த பின், ‘தமிழக அரசிய லில், ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பத் தகுதியான நபர் நானே’ என்று அவர் கேப்டன் விஜயகாந்துடன் தெரிவித்ததாக்கவும், கேப்டன் உள்பட கட்சியினர் அனைவரும் இனிமேல் தன்னை ‘அம்மா’ என்றுதான் அழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் கேப்டனுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, இப்போது கட்சியில் தொண்டர்கள் யாரும் இல்லாததால் பிரேமலதாவை அவரது மகன்கள் மட்டும் ‘அம்மா’ என்று அழைக்க கேப்டன் உத்திரவிட்டுள்ளதாக தெரிகிறது.

பகிர்

There are no comments yet