சென்னை: தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 75 நாட்கள் சிகிச்சை பெற்றபோது டாக்டர்களுடன் சேர்ந்து 24 மணி நேரமும் அவரது தோழி சசிகலா உடனிருந்து கவனித்துக்கொண்டார். சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா இறந்தவுடன், அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டபோது ஜெயலலிதா உடல் அருகே கண்ணீர் மல்க நின்றுகொண்டிருந்தார். ஜெயலலிதா உடல் அடக்கம் செய்வதற்காக ராணுவ வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டபோது சசிகலா கண்ணீர்விட்டபடியே அவரது உடல் அருகே அமர்ந்திருந்தார். இந்தநிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக சசிகலா நேற்று மாலை 6.20 மணியளவில் வந்தார். ஜெயலலிதா சமாதியில் வைக்கப்பட்டுள்ள அவருடைய உருவப்படத்தை பார்த்ததும் சசிகலா கண்களில் கண்ணீர் வழிந்தது. அருகில் இருந்த இளவரசி, சசிகலாவுக்கு கைக்குட்டை வழங்கினார். அதை வைத்து சசிகலா தன்னுடைய கண்ணீரை துடைத்துக்கொண்டார். பின்னர் ஜெயலலிதா சமாதியில் இரண்டு முறை சசிகலா விழுந்து கும்பிட்டார். பூக்களை தூவி அஞ்சலி செலுத்திவிட்டு கண்ணீர் மல்க ஜெயலலிதா சமாதியை சுற்றி வந்தார். பின்னர் சிறிது நேரம் அங்கேயே சோகத்துடன் நின்றுவிட்டு 6.35 மணியளவில் சசிகலா புறப்பட்டார். அவரை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வழி அனுப்பி வைத்தனர்.sasi2-09-1481300438

பின்னர் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அங்கு பார்வையாளராக நின்றிருந்த நமது கப்ஸா நிருபரிடம் பேசிய ஓ.பி.எஸ், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பத்து வருடங்கள் மன்மோகன் சிங் பெயரளவில் தான் பிரதமராக இருந்தார். பின்னால் இருந்து சோனியா காந்தி அவரை ஆட்டிவைத்து மறைமுக ஆட்சி செய்தார். அது போல் நான் பெயரளவுக்குத்தான் முதலமைச்சர். மன்மோகன் வழிப்படி, நான் தமிழகத்தின் மன்மோகன் சிங்காக இருந்து சின்னம்மாவின் சொல்படி நல்லாட்சி தருவேன். என்ன இப்போதெல்லாம் கார் டயரையம், ஹெலிகாப்டரையும் பார்த்து குனிந்து மண்டியிட்டு கும்பிட தேவையில்லை. முதுகு வலி மிச்சம் என்று கூறி ஜெயலலிதா சமாதியில் நினைவிடம் அமைப்பது தொடர்பாக அங்கு கூடாரம் அமைத்து முகாமிட்டுள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த விரைந்தார்.

There are no comments yet