சென்னை: செப்.22 அன்று உடல்நலக் குறைவால் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதலே அவர் சிகிச்சை பற்றிய விவரங்களை கேட்டு அரசியல்வாதிகளும் பிரபலங்களும் கேள்வி எழுப்பிய வண்ணம் இருந்தனர். முதலில் கலைஞர் ‘ஜெயலலிதா நேரில் வந்து தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும், என்றார். பாமக ராமதாஸ் ‘சிசிடிவி பதிவுகளை வெளியிட வேண்டும்’ என்றார். ஜெயலலிதாவின் நல்லடக்கம் முடிந்த பிறகு ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மரணத்தை விலக்க வேண்டும் என்று கவுதமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இப்போது புதிதாக நடிகர் மன்சூர் அலிகான் இந்த லிஸ்டில் சேர்ந்து கொண்டுள்ளார்.
அம்மாவின் சாவில் மர்மம் உள்ளது. அவரை பார்த்துக் கொள்ள கூட இருந்த சசிகலா நடராஜன் மற்றும் அப்பல்லோ பிரதாப் ரெட்டி தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.. தேவைப்பட்டால் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அம்மாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேள்வி கேட்பேன்” என்று ஆவேசமாக கூறியுள்ளார். இது குறித்து மேலும் செய்தியை பெற மன்சூருக்கு மிகவும் பிடித்த ‘420’ பீடா வாங்கி கொடுத்து நம் கப்சா நிருபர் அவரிடம் பேட்டி எடுத்தார். அதில் அவர் கூறியதாவது: விஜயகாந்த் நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் அவருக்கு ‘எதிர்’ நாயகனாக களம் இறங்கி ‘வீரப்பன்’ வேடத்தில் நடித்தேன். பின்னர் கற்பழிப்பு வழக்கில் சிக்கி ஜீவனாம்சம் கொடுத்து, அந்த பெண்ணிடமே என் வில்லத்தனத்தால் 50 லட்சம் அபராதம் வாங்கி உண்மையான வில்லன் என்று நிரூபித்தேன். கொஞ்ச நாள் அதிமுகவில் குப்பை கொட்டினேன். பிறகு பாமகவில் சிறிது காலம். ரியல் எஸ்டேட்டிலும் கால் வைத்தேன், அந்த தொழிலும் என்னை கை கழுவி விட்டது. ‘எதிர்’ நாயகனாக் பரிமளிக்க முடியாதால் காமெடியனாக ஆன நானும், அரசியலில் இறங்கி சிறகொடிந்த பீனிக்ஸ் பறவையாக, இண்டர்னெட் மீம் கிரியேட்டர்களின் ஆஸ்தான ஜோக்கராய் ஆகிப் போன விஜயகாந்திடம், ஆனந்த ராஜ், அருண்பாண்டியன், உள்ளிட்ட நண்பர்களுடன் சென்று ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை ‘புலன்விசாரணை’ செய்ய கோரிக்கை விடுக்க உள்ளோம்.
கேப்டன் பிரபாகரன் படத்தில் நான் நடித்த வீரப்பன் கதாபாத்திரத்தை கொன்று தனது சினிமா வாழ்வுக்கு மறுவாழ்வு கொடுத்தவர் விஜயகாந்த், ஆனால் அம்மாவோ நிஜ வீரப்பனையே மர்மமான முறையில் கொன்று தனது அரசியல் வாழ்வை தக்க வைத்துக் கொண்டார். எனவே வீரப்பன் மரணத்திலும், ஜெயா மரணத்தில் மர்மம் இருக்கிறது. இதை புலன் விசாரணை செய்ய தகுந்த நபர் கேப்டன் விஜயகாந்த் தான். மேலும் எதிர் நாயகனாக இருந்த நான் இப்போது ‘புதிர்’ நாயகனாக மாறி, புதிய சினிமாக்களில் காமெடி வேடங்களை பெற இது மாதிரி ‘சீப்’ பான விஷயங்களை செய்ய வேண்டியதும் புரளி கிளப்பி விடுவதும் அவசியமாகிறது..” என்று பீடா எச்சில் தெறிக்க கூறினார்.
There are no comments yet
Or use one of these social networks