சென்னை : வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் தீவிரமடைந்துள்ளது. சென்னையிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என வானிலைமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடதமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடத்த ஜனவரியில் சென்னை மற்றும் கடலூரில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்கு தமிழகம், மற்றும் உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் தந்த . உதவி பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களை மறித்து, அதில் ஜெயலலிதா பட ஸ்டிக்கரை அதிமுகவினர் ஒட்டி விநியோகித்தது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, கட்சியில் உடன்பிறவா சகோதரி சசிகலாவின் கை ஓங்கி உள்ளதால், சின்னம்மா சசிகலாவின் ஸ்டிக்கர்கள் ரெடியாக உள்ளதாக நம்பத்தகாத செய்திகள் தெரிவிக்கின்றன. பொருளுக்கு தக்கவாறு வெவ்வேறு சைஸ் ஸ்டிக்கர்கள், ஸ்டாம்ப் சைஸ் முதல் ஏ4 சைஸ் ஸ்டிக்கர் வரை, தயாராக இருப்பதாக தெரிகிறது.
There are no comments yet
Or use one of these social networks