சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மறைந்த துக்ளக் பத்திரிகை ஆசிரியரும், நடிகருமான சோ ஆகியோருக்கு சென்னை கோடம்பாக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இன்று மாலை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு தனது மைண்ட் வாய்ஸில் பேசியதாவது: 1996 சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராகவும், கருணாநிதிக்கு ஆதரவாகவும் ‘ஜெயலலிதாவுக்கு மீண்டும் வாக்களித்தால் தமிழ்நாட்டை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது’ என்று நான் வாய்ஸ் கொடுத்தேன். அதன் மூலம் கருணாநிதி குடும்பம் ஆட்சிக்கு வந்தது, தமிழகம் கொள்ளை போனது. அதனால் ஜெயலலிதா மனம் துன்பப்பட்டது. அதன் பின்னர் எனது வீட்டில் நடந்த மகள் திருமண நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா வரமாட்டார் இருந்தாலும் அழைக்காமல் இருக்க கூடாது என அழைப்பிதழ் கொடுத்து வர வேண்டும் என்றேன். அதே தேதியில் கட்சித் தொண்டர் இல்லத் திருமண விழா உள்ளது இருந்தாலும் வருகிறேன் என்று கூறி, எனது அழைப்பை ஏற்று அவர் மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் மகளின் திருமணத்திற்கு வந்து அவரது மனிதாபிமானத்தை நிருபித்தார். இன்னா செய்தாரை ஒருத்தல் என்ற குறளுக்கு இலக்கணமானார்.
ஆட்சியில் இல்லாதபோது, கருணாநிதியின் குடும்பத்தின் சொல்லணா துயரங்களுக்கு ஆளானார் ஜெயலலிதா. ஆனால் நான் எனது படங்களில் வில்லன் ஆட்களை டூப் போட்டு அடித்து துவைப்பது போல், கருணாநிதியின் கொடுமைகளை பொடிபொடியாக்கி மீண்டு வந்தார். என்னைப் போன்ற ஆண் ஆதிக்கம் மிகுந்த சமுதாயத்தில் தன்னுடைய முயற்சியால் சோதனைகளை சாதனைகளாக்கி முன்னேறி காட்டியவர் ஜெயலலிதா. பொதுவாழ்க்கையில் ஜெயலலிதா வைரம் போன்றவர். துணிச்சல், எதிர் நீச்சல் போன்றவற்றை ஜெயலலிதாவிடம் கற்க வேண்டும்.
என்னை மன்னித்த ஜெயலலிதா என்ற பெரிய ஆத்மா மகாத்மா ஆகிவிட்டது. அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று நா தழுதழுக்க உணர்வுபூர்வமாக பேசினார் ரஜினிகாந்த்.
There are no comments yet
Or use one of these social networks