சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை (டிச.5) இரவு 11.30 மணிக்கு மறைந்தார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் கடந்த 75 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.4) மாலை 5 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை இரவு வரை அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தில்லியிலிருந்து எய்ம்ஸ் மருத்துவர்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை குறித்து ஆய்வு செய்தனர். இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. அவரது மரணம் அ.தி.மு.கவினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. “தனிநபர் விருப்பத்தையும் தாண்டி மக்கள் பணி பாதிக்கப்படும் பட்சத்தில் மக்கள் பிரதிநிதிகளின் உடல்நிலை குறித்த விஷயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் எனச் சட்டம் சொல்கிறது. ஆனால், முதல்வர் ஜெயலலிதா விவகாரத்தில் மருத்துவமனையின் செயல்பாடுகள் அவ்வளவு திருப்தியாக இல்லை. பல கேள்விகளுக்கு பதிலே சொல்லப்படவில்லை.bharka-email

இந்நிலையில் தவறான நீரிழிவு (டயபெடிக்) மருந்து கொடுக்கப்பட்டதால் ஜெயலலிதா அப்பல்லோவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரபல பத்திரிகையாளர் பர்கா தத் எழுதியதாக கூறப்படும் ஈமெயில் தகவலில், அப்பல்லோ மருத்துவனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு, ஜெயலலிதாவிற்கு தவறான டயபெடிக் மருந்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

பெரும்பாலான டயபெடிக் மருந்துகள் உடலின் சர்க்கரையும் குறைக்கும் தன்மை உடையவை, ஆனால் உடலின் சர்க்கரை மிகவும் குறைந்தால் ‘ஹைபோ கிளைசீமியா’ எனப்படும் சர்க்கரை பற்றாக்குறை ஏற்பட்டு , மயக்கம், கோமா போன்ற நிலைக்கு ஆளாக நேரிடும். சமயத்தில் இறப்பு கூட நேரிடலாம். சாதாரணமாக அளவுக்கு அதிகமாக இன்சுலின் கொடுத்தால் இந்த மாதிரி வர வாய்ப்பு உள்ளது.

இது அல்லாமல், அப்பல்லோவில் ஜெயலலிதா, சாதாரணமான முன்னேற்றம் கண்டார் என்றும், ஆனால் அவர் முழுமையான பழைய நிலையை அடையவில்லை என்றும், சில சமயங்களில் பிறர் சொல்லுவதை கேட்கும் நிலைமையில் இருந்தார் என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

போயஸ் கார்டனிலும், அப்பல்லோவிலும் என்ன நடந்தது என்பது அந்த சசிகலாவிற்கே வெளிச்சம்..!

There are no comments yet